ராமர்கோயில் திறப்பு விழா
திறப்பு விழா பலரின் உள்ளத்தை
திறந்து காட்டும்
•••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் 1508
***********
மதம் இனம் மொழி நாடு
தாண்டிய மனித நேய பண்பாடுகளை முஸ்லிம் சமூகத்திடமே
அதிகம் காண முடியும்
அரசு மூலமாகவோ அதிகாரவர்க்கத்தினர் மூலமாகவோ நாட்டு மக்களுக்கு பொதுவான பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்ட சூழல்களில்
அதை தட்டி கேட்கும் முதல் சமூகமாக இருப்பதும் முஸ்லிம் சமுதாயமே
இயற்கை சீற்றங்களின் போது
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது களமிறங்கி பணியாற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயமே முன்னனி
மற்ற எந்த சமுதாயமும்
இவ்விசயத்தில் வரம்புகளை உள்ளடக்கியே வாழ்கின்றனர்
அடிக்கடி தனது மனதில் மறைமுகமாக ஒட்டியிருக்கும் அல்லது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தவே செய்கின்றனர்
முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம திருப்திக்காக சிலர் அறிக்கை தருவதும் அரசியலுக்காக சிலர் குரல் கொடுப்பதும் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கு கொள்வதுமே அதிகபட்சமாக
பிற சமூகத்தினர்கள் தங்களை நடுநிலைவாதிகளாக காட்டிக்கொள்வதற்கு செய்யும் தந்திரமாகும்
அத்தகையோரின் நிஜ உருவத்தை தோலுரித்து காட்டக்கூடிய மிகப்பெரும் சம்பவமே பாபர் மஸ்ஜித் விவகாரம்
நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல்
நிலைபெற்றிருந்த பாபர் மஸ்ஜிதை
அபகரிக்க சிறு கூட்டம் சூழ்ச்சி செய்த நேரத்திலும் ரதயாத்திரை மேற்கொண்டு பல முஸ்லிம்களின் உயிரை குடிக்க காரணமாக இருந்த சூழலிலும்
அதை எதிர்த்து எந்த சமுதாயமும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியது இல்லை
சூழ்ச்சியாளர்கள் பாபர் மஸ்ஜிதை இடித்த போதும் அதை கண்டித்து கண்டன கூட்டங்களை
எந்த சமூகமும் நடத்தியது இல்லை
சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய போதும் அதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இதுவரை எந்த சமுதாயமும்
ஆறுதல் கூறியதும் இல்லை
ராமர்கோயில் அடிக்கல் நாட்டு விழாவை மதசார்பற்ற நாட்டின் பிரதமர் முன்னின்று பூஜை நடத்தியதை கூட கண்டித்து எந்த சமுதாயமும் அறிக்கைகளை வெளியிட்டதும் இல்லை
தற்போது அபகரிக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் ராமர்கோயில் திறப்பு விழாவை அரசே முன்னின்று அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பியும் அதை புன்னகையோடு பெற்றுக்கொண்டார்களே தவிர எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக எக்கருத்தையும் வெளிப்படுத்தவும் இல்லை
இது தான் முஸ்லிம்களை பற்றி இந்திய மக்களின் பாரபட்சமான நிலை
அவர்கள் மனங்களின் ஓரத்தில் முஸ்லிம்கள் இந்திய நாட்டில் குடியிருக்கும் அந்நியர்களே என்ற உறுத்தல்கள் நெடுங்காலமாகவே இருந்து கொண்டுள்ளது
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டப்பட்டது என்ற பெயர் மட்டுமே இனி நீடிக்கும்
இப்பெயரை இனி ராமரே நினைத்தாலும் அழிக்க முடியாது
ராமருக்கு கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள்
எதிரிகள் அல்ல
ராமருக்காக எழுப்பப்பட்ட கோயிலை இடித்து விட்டு பாபர் பெயரில் பள்ளிவாசலை கட்டுவதற்கு முஸ்லிம்கள் அறிவீனர்களும் அல்ல
இவ்விசயத்தில் நீதிமன்றத்தின் மீது பல ஆண்டுகள் வைத்திருந்த நம்பிக்கை இழப்பே முஸ்லிம்கள் அமைதியாக கடப்பதற்கு காரணமே தவிர
நீதியின் அடிப்படையில் நடந்து கொண்டார்கள் என்ற சந்தோசத்தின் வெளிப்பாடு அல்ல
அரசன் அன்று கொள்வான்
கடவுள் நின்று கொள்வான்
என்ற பழமொழியை ஆன்மீகத்தின் அடிப்படையில் ஆழமாக நம்புபவர்களே முஸ்லிம் சமுதாயம்
ராமர்கோயில் திறப்பு விழா அழைப்பை ஏற்று செல்லும் அரசியல்வாதிகள் நடிகர்கள் தங்களின் நிஜ உருவத்தை வெளிப்படுத்தி விட்டார்கள் என்ற எதார்த்தம் மட்டுமே இனி ஊர்ஜிதமாவது உண்மை
அவர்கள் விசயத்தில் முஸ்லிம் சமுதாயம் வருங்காலத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேணேடும் என்பதே இனி பெற வேண்டிய முக்கியமான படிப்பினை
ராமர்கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமுதாயம் வெறுப்புடன் செயல்படுவது போல் சில புல்லுருவிகள் முஸ்லிம்களின் பெயரை பயன்படுத்தி தவறான சித்திரத்தை உருவாக்கும் விதம் ஈடுபட்டதை சமீபத்தில் அறிந்தோம்
இதை கவனத்தில் கொண்டு ராமர்கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு முஸ்லிம் சமுதாயம் அவசியமற்ற அறிக்கைகளை வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்
எதிரிகள் திசைதிருப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்பை திணிக்கும் அளவு எக்கருத்தையும் முஸ்லிம்கள் பரிமாறி விடக்கூடாது
அதனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு பின்னடைவே ஏற்படும்
இறைநம்பிக்கையே முஸ்லிம்களின் தும்பிக்கை
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
இறைநம்பிக்கையாளர்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்
எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செலுத்தாமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.
நீதியாக நடந்து கொள்ளுங்கள் இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை அறிந்தவனாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 5:8)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
6-1-2024
Comments
Post a Comment