பித்னா விரும்பிகள்
மீண்டும் பித்னா விரும்பிகள்
ஊடுருவல்
[][][][][][][][][][][][][][][][]
கட்டுரை எண் 1315
********
29-01-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
•••••••••••••••••
சமூக சிந்தனையோடு நம்மால் இயன்ற பங்களிப்பை ஜனநாயக ரீதியில் ஏதோ ஒரு வகையில் நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைய மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அந்த கருத்தின் எதார்தத்தை புரிந்து அதன் வழியில் பயணிக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்
அதே வேளையில் இதன் மூலமும் நாம் யாரை குறை கூறலாம் ?
எந்த இயக்கங்களை குறை கூறலாம் ? எவ்வாறு அவர்களை பொதுவான இந்த விசயத்தில் இருந்தும் தனிமை படுத்தலாம் என்று யோசிப்பவர்கள்
வழக்கம் போல் அவர்களின் பித்னா தன்மையை அவர்களை அறியாமலேயே வெளிப்படுத்தி வருகின்றனர்
இந்த பித்னாவில் சிந்திக்க கூடிய சில மக்களும் மார்க்க அறிஞர்களும் அடிமை பட்டு இருப்பது தான் ஆச்சரியமான விசயம்
சைத்தானின் வலையில் இருந்து தப்பிப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இவர்களின் மூலமே நாம் அதிகமாக மீண்டும் எச்சரிக்கை உணர்வை பெறுகிறோம்
இது போல் பித்னா விரும்பிகளின் ரசனைக்கு ஆளாகி நாமும் நம் சமுதாய பிரச்சனைக்கு துரோகியாக மறுமை வாழ்வை நாசமாக்கி விட கூடாது
குறிப்பாக இந்தியாவின் தற்போதைய சூழலில் இவர்களே நம் சமுதாயத்தின் பச்சை துரோகிகள்
மற்றவர்களின் தவறை சுட்டி காட்டுகிறோம் எனும் பெயரில் எப்போதும் இவர்களே தவறுகளை தொடர்ந்து செய்து வரும் துர்பாக்கியசாலிகள் ஆவர்
இறைவன் மற்றவர்களை மன்னிக்கும் தன்மையிலும் மூக்கை நுழைத்து தங்களை பாவிகளாக மாற்றி வரும் இவர்களை கண்டு கொள்ளாமல் தவிர்ந்திருப்பதே சிறந்தது
وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ
ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது
(அல்குர்ஆன் : 2:217)
اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான்
இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்
(அல்குர்ஆன் : 2:15)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment