சுபுஹான மவ்லூது
மவ்லூத்வாதிகளின்
முரண்பாடுகள்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1203
17 -11-18 சனி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அல்லாவின் தூதரே
யாமுஸ்தபா
!! அஸ்ஸலாமு அலைக்கும் !!
என்று EM நாகூர் ஹனீபா அவர்கள் பாடலாக படித்ததை ஒரு முஸ்லிம் படிப்பது சுன்னதான வழி முறை இல்லையாம்
அவர் பாடிய அந்த பாடலை முஸ்லிம்கள் அடிக்கடி படிக்காது போனாலும் அது குற்றம் இல்லையாம்
அந்த பாடலை படிக்கும் போது அல்லது செவியுறும் போது பக்தியோடு தலையில் தொப்பி அணிவதும் அவசியம் இல்லையாம்
அந்த பாடலை ஒருவராகவோ அல்லது குழுவாகவோ படித்தால் கூட அதை பக்தியோடு அமர்ந்து கேட்பதும் அவசியம் இல்லையாம்
அந்த பாடலை வாழ்நாளில் ஒரு முறை படிக்காதவன் கூட வழிகேடன் இல்லையாம்
அந்த பாடலை பள்ளிவாசலின் உள் அரங்கில் ஒருவர் சப்தமிட்டு படித்தால் கூட
அந்த மனிதனை ஏன் பள்ளிவாசலில் இதை படிக்கின்றாய் ? பள்ளிவாசல் பாடல்களை படிப்பதற்காகவா கட்டப்பட்டு உள்ளது என்று இமாம்கள் உட்பட மோதினார் மற்றும் பள்ளிவாசலை நிர்வகிக்கும் பொருப்பாளர்களும் கடுமையாக கண்டிப்பார்களாம்
ஆனால் நாகூர் அனீபா பாடிய அதே பாடலின் மூல அரபு பாடல் வரிகளை
அதாவது அஸ்ஸலாமு அலைக
!! ஜைனல் அன்பியாயீ !!
என்ற சுபுஹான மவ்லூது அரபு பாடல் வரிகளை அன்றாடம் ஒரு முஸ்லிம் பாடினால் அது இறைவனுக்கு பிடித்தமான இபாதத்தாம்
சுபுஹான மவ்லூதை படித்தால் மறுமையில் நபிகளாரின் பரிந்துறை கிடைக்குமாம்
சுபுஹான மவ்லூதை படிக்கும் போது தலைக்கு தொப்பி போட்டு அமைதியாக அமர வேண்டுமாம்
சுபுஹான மவ்லூதை புறக்கணிப்பவர்கள் இஸ்லாத்தை புறக்கணிக்கும் படு பாவிகளாம்
கல்யாண வீட்டிலும் இறந்து போனவர்களின் வீட்டிலும் சுபுஹான மவ்லூதை படிப்பதால் நன்மைகள் குவியுமாம்
*********
அல்லாஹ்வின் தூதரே யாமுஸ்தபா என்ற பாடலை EM நாகூர் ஹனிபாவுக்கு தமிழ் அறிந்த ஒரு பாடல் ஆசிரியர் எழுதி கொடுத்தது
சுபுஹான மவ்லூது எனும் பாடலை அரபு தெரிந்த ஒரு கவிஞர் இயற்றியது
இது மட்டுமே வேறுபாடு
இதில் நாகூர் ஹனீபா பாடலுக்கு ஒரு பார்வையும்
அதே கருத்தில் நேரடியாக அமைந்த அரபு பாடலுக்கு ஒரு பார்வையும் பார்ப்பது முரண்பாடு இல்லையா ?
திருமறை குர்ஆனின் வசனங்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளனர்
சுபுஹான மவ்லூதை படிக்கும் போது அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் கிடைக்கும் என்றோ அல்லது அதன் ஒவ்வொரு வரிகளுக்கும் நன்மைகள் கிடைக்கும் என்றோ யார் உத்திரவாதம் கொடுத்தது ?
சுபுஹான மவ்லூது படிப்பது நன்மையான காரியம் என்றால் அந்த மவ்லூத் பாடலை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கற்று தராமல் போனார்கள் ?
சஹாபாக்களில் ஒருவர் கூட ஏன் இந்த கேள்வியை நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை ?
வருடத்திற்க்கு ஒரு முறை திருக்குர்ஆனை ஓதுவதை வழிமுறை படுத்தாத பள்ளிவாசல் நிர்வாகங்கள்
வருடத்திற்க்கு ஒரு முறை 12 நாட்களும் ரபியுலவ்வல் மாதத்தில் இதை பள்ளிவாசலில் ஓதியே ஆக வேண்டும் என்று பள்ளிவாசல் நிர்வாகம் எதை ஆதாரமாக கொண்டு இதை நடைமுறை படுத்தி வருகின்றனர்
இப்படி பலவிதமான கேள்விகளில் ஒன்றுக்கும் கூட தெளிவான பொருத்தமான பதிலை சொல்லாதவர்கள் சுபுஹான மவ்லூதை மார்க்கமாக நினைப்பதே அறிவீனமான செயல் ஆகும்
இஸ்லாத்தில் கவிதைக்கு அனுமதி உள்ளது
ஆனால் கவிகளை படிப்பதை இபாதத்தாக எங்கும் சொல்லப்படவில்லை
கவிதைகளை உருவாக்கிய சில சஹாபாக்கள் கூட அவர்கள் உருவாக்கிய கவிதைகளை அந்த சந்தர்ப்பத்தில் படித்தார்கள் தவிர அவர்கள் உருவாக்கிய கவிதைகளை நபிகள் நாயகம் அனுமதித்த கவிதைகளை கூட வருடம் தோறும் நன்மைகளை நாடி தனியாகவோ குழுவாகவோ படித்து கொண்டிருக்கவில்லை
காரணம் இஸ்லாத்தில் கவிதை அனுமதி என்பது ரசனைக்கு மட்டுமே தவிர
அது மறுமைக்கு உதவாது
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِىْ لَهٗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை
அது அவருக்குத் தேவையானதும் அல்ல
இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை
(அல்குர்ஆன் : 36:69)
6154. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பி இருப்பதை விட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment