வேலூர் இப்ராஹீம் நிலைப்பாடு

      வேலூர் இப்ராஹீம் நிலைபாடும்
              எதார்த்த நிலைபாடும்

        ♦♦♦♦♦♦♦♦♦♦                                                
             கட்டுரை எண் 1288
                     بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
               
            ★★★★★★★★★★★

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை எழுத்துரிமை என்பது தான் குடிமக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உச்சகட்ட உரிமையாகும்

விரக்தியால் தோல்வியால் பாதிக்கப்பட்டதாக கருதும் மனிதன் அதன் விளைவாக தவறான பாதையை தேர்வு செய்து நாட்டின் நலனுக்கு கெடுதி செய்யாமலும் தவறான பாதையை சரிகாணாது  இருப்பதற்காகவும்  தனது ஆதங்கத்தை மேற்கூறப்பட்ட இரு  உரிமையின் மூலம் நாகரீகமாக வெளிப்படுத்தி அவனது மனதை சாந்தப்படுத்தி கொள்வதற்கு தான் பேச்சுரிமையும் எழுத்துரிமையும்
வழங்கப்பட்டுள்ளது

வெள்ளையர்களின் ஆட்சியை பல வருடங்கள் எதிர்த்து அவர்களை நம் தேசத்தை விட்டு விரட்டி அடித்தற்கு மூல காரணமே இந்த இரு உரிமைகளும் அவர்கள் ஆட்சியில் இல்லாது இருந்தது தான் மூல காரணம்

அந்த அடிப்படையில் தான் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கு அதிருப்தி இருந்தாலும் அந்த தீர்ப்புக்கு மாற்றமாகவும்  ஜனநாயகத்திற்கு எதிரான செய்கையில் ஈடுபடாமலும்  அமைதி காத்து இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட ரீதியில் தங்களது அதிருப்தியை போராட்டங்களின் மூலம் தமிழக முஸ்லிம் அமைப்புகளும் சிறுபான்மை  உரிமைக்கு குரல் கொடுக்கும் சில அரசியல் தலைவர்களும் அறிவுப்பூர்வமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்

இவ்வாறு வெளிப்படுத்துவது நாட்டின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமையை பயன்படுத்தும் மக்களையும் அவர்களை சார்ந்த  தலைவர்களையும் கண்டித்து இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமைக்கு மாற்றமாக ஆலீம் வேலூர் இப்ராஹீம் என்பவர் தவறான செய்தியை மக்களிடம் கூறி அவருக்கு பிடிக்காத தனிப்பட்ட மனிதன் மீதுள்ள கோபத்தை தீர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார்

முஸ்லிம்களுக்கு மக்கா புனிதமான நகரமாக இருப்பதை போல் அயோத்தி இந்து சகோதரர்களின் புனித நகரம் என்றும் அதனால் இவ்விசயத்தில்  வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பும் என்றும் சிந்தனையை இழந்த நிலையில்  உளரி வருகிறார்

மக்கா புனிதமான நகரமாக இருப்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அங்குள்ள கஃபா எனும் இறையில்லம் எந்த வழிபாட்டு தலத்தையும் இடித்து விட்டு கட்டப்படவில்லை என்பதாகும்

இந்த உவமையை 450 ஆண்டுகாலம் பள்ளிவாசலாக இருந்த பாபர் மசூதி எனும்  இறையில்லத்தை  இடித்துவிட்டு அதற்கு உரிமை கொண்டாடிய நபர்களுக்காகவும் அதற்கு ஏற்ற நிலையில் தீர்ப்பு வழங்கியவர்களுக்காகவும் ஆதரவாகவும் சத்தியத்திற்கு பாடுபடும் நபராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்

இந்த ஒரு விசயமே  வேலூர் இப்ராஹீம் என்பவருக்கு மார்க்கஞானம் எந்தளவு குன்றியுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது

பைதுல் முகத்தஸ் எனும் புனிததலமும்  கூட யூதர்களுக்கு உரிமையானது என்று இவர் பேசும் நிலைக்கு தள்ளப்படுவாரோ என்று சந்தேகிக்க தோணுகிறது 
குறிப்பாக இவ்விசயத்தில் தனது சுயநலகருத்தை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிபலிப்பாக சித்தரிப்பது அவரை ஆலீம் என்ற கண்ணியமான  பதத்தில் இருந்து இறக்கி காட்டுகிறது

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தில் முனாஃபிக்குகள் ஊடுருவல் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது

அந்த வரிசையில் வேலூர் இப்ராஹீம் என்பவர் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தால் பார்க்கப்படுவார் என்பதை வேலூர் இப்ராஹீம் நினைவில் வைக்கட்டும்

தற்போது வேலூர் இப்ராஹீம் என்பவரின் மகன் ஆலீம் முஹம்மத் அலி புகாரியே அவரது தந்தையை இவ்விசயத்தில் கண்டித்து வீடியோ வெளியிட்டு இருப்பது வரவேற்க தக்க ஒன்று

اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்

ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ  (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள் அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன அவர்களே நரகவாசிகள்
அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்

           (அல்குர்ஆன் : 2:257)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَـتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْـكُفَّارَ اَوْلِيَآءَ‌  وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், நிராகரிப்பாளர்களில் இருந்தும்  யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்

நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்

         (அல்குர்ஆன் : 5:57)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்