தொழுகையாளியும் பாவியாகிறான்
தொழுகையாளியும்
பாவியாகிறான்
♦♦♦♦♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1427
21-11-2021
*******
தொழுகையின் மூலம் நன்மைகளை ஈட்டி அதை பித்னாக்களின் மூலம் உடனடியாக அழிக்கும் பாவிகளாக பலர் இருப்பதை பரவலாக காண முடிகிறது
உழைப்பின் பலனை குப்பையில் வீசுபவனும்
தொழுகையின் பலனை பித்னா மூலம் அழித்து கொள்பவனும் அறிவிலியே
சாத்தான் இருக்கின்றான் என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவை இல்லை
மதுபானத்தை குடிக்க வைத்து மனிதனை பாவத்தில் வீழ்த்தவும் சாத்தானுக்கு தெரியும்
மதிப்புள்ள தேன் பானத்தை கழிவறையில் ஊற்ற வைத்து அதை கண்டு ஏளனமாக சிரிக்கவும் ரசிக்கவும் சாத்தானுக்கு தெரியும்
நாவுகள் மூலம் வெளிப்படும் சொற்களும்
வார்த்தைகள் மூலம் தீட்டப்படும் எழுத்துக்களும் செவியின் மூலம் உள்வாங்கி ரசிக்கும் ஓசைகளும் பாவத்தில் மாறுபட்டவையாக இருந்தாலும் நரகத்தில் சமமானவையே
நான் இல்லாத ஒன்றையா பேசினேன் ஒருவனிடம் இருக்கும் ஒன்றை தானே பேசினேன் என்று சமாளிப்பது ஒரு மனிதன் தனது பாவத்திற்கு போடும் உரம்
எதை தன் விசயத்தில் பிறர் பேசுவதை மனிதன் வெறுக்கின்றானோ
எதை தன் விசயத்தில் பிறர் ரசிப்பதை மனிதன் வெறுக்கின்றானோ
எதை தன் விசயத்தில் பிறர் அறிவதை யாருக்கும் தெரிய கூடாத ரகசியமாக கருதுகின்றானோ
எதை தன் விசயத்தில் பிறர் பேசுவதை மனிதன் முகம் சுழிக்கின்றானோ
அதை பிறர் விசயத்தில் ஒரு மனிதன் பாவமாக கருதாது சாதாரணமாக ஈடுபடுவது தான் பித்னா
அது பிறர் மீது கூறப்படும் குறையாக இருப்பினும் சரி
அவதூறாக இருப்பினும் சரி
குற்றச்சாட்டாக இருப்பினும் சரி
கேலி கிண்டலாக இருப்பினும் சரி
இஸ்லாத்தில் கொலை செய்வது பெரும்பாவம்
அதை விட பெரும்பாவம் பித்னாவில் ஈடுபடுவது என்பதை புரியும் வரை தொழுகையாளிகளும் இதில் நஷ்டவாளிகளே
وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ
(ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது
(அல்குர்ஆன் : 2:217)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment