புறத்தை அறமாக கருதும் அறிவீனர்கள்
புறத்தை அறமாக கருதும்
அறிவீனர்கள்
[][][][][][][][][][][][][][][]
14- 06-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
***********
மார்க்க உணர்வோடு தவறுகளை சுட்டி காட்டுதல் என்பது ஒரு வகை
மார்க்கத்தை காரணமாக வைத்து தனக்கு பிடிக்காத மனிதனை அல்லது அமைப்பை அல்லது கொள்கையை குறை கூறி ரசித்து ருசிப்பது அதில் படுகேவலமான
ஒரு வகை
சமூகவலை தளத்தில் இதில் இரண்டாம் வகையினர்களே மிகவும் அதிகம்
அவர்கள் போடும் பதிவுகளில் மனிதர்களின் இரத்த வாடையே வீச்சமாக வீசுகிறது
மணம் வீசும் அத்தராக நினைத்து கொண்டு பெரும் கூட்டம் அந்த குப்பை மேட்டில் ( பதிவுகளில் ) குதூகலம் பாடுவதில் தான் இரத்த குடிக்கும் பதிவாளரை விட தாங்களே இவ்விசயத்தில் முதலிடம் வகிப்பவர்கள் என்பதை நூறு சதம் நிரூபித்து வருகிறது
பிறர்களின் தவறுகளை கண்டிக்கிறோம் எனும் பெயரில் மார்க்கம் அனுமதிக்காத பல தவறுகளை தன்னில் வெளிப்படுத்தி அதன் மூலம் தன்னை சார்ந்த நண்பர்களையும் பாவிகளாக மாற்றி நரகத்தின் பக்கம் இழுத்து செல்லும் அறிவீனர்களே மிகவும் அதிகம்
புறம் பேசுவது அல்லது பிறர்களை குறை கூறி திரிவது இஸ்லாத்தில் பர்ளோ அல்லது சுன்னத்தோ அல்லது முஸ்தஹப்போ அல்லது நபிஃலோ இல்லை என்பதை உணராத வரை இவர்களை எவராலும் திருத்த இயலாது
وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்
(அல்குர்ஆன் : 7:8)
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்
(அல்குர்ஆன் : 23:3)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment