முபாஹலா
முபாஹலா எனும் சாபத்தின்
அழைப்பு தேவையா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
30-03-18- வெள்ளிக்கிழமை
*********************
கட்டுரை எண் 1132
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்
வாருங்கள்
எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு)
பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்
(அல்குர்ஆன் : 3:61)
மெய்யுக்கும் பொய்யுக்கும் இடையில் இரு நபர் அல்லது இரு சாராருக்கு மத்தியில் சரியான தீர்வு கிடைக்காத போது
அல்லது ஒரு சாராரின் வாதங்களை பொய் என்று வாதிட்டு அதில் ஒரு தீர்வின் பக்கம் வராத போது அவர்களின் இறுதி முடிவை இறைவனின் புறத்திலேயே ஒருவருக்கொருவர் பிராத்தனையின் மூலம் பொய்யர்களின் மீது சாபத்தை கோரும் செயலையே திருக்குர்ஆன் முபாஹலா என்று சொல்கிறது
இது போன்ற ஒரு பிராத்தணையை நடத்தும் போதும் வாதிடும் இருவரும் தங்கள் மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகளை அழைத்து கொண்டு அவர்கள் கோரும் சாப பிராத்தணையில் அவர்களை சார்ந்தோரையும் இணைத்து கொள்வது என்பது முபாஹலாவின் முக்கியமான விதியாகும்
பொய்யான ஒன்றுக்கு இறைவனிடம் சாபத்தை பிராத்தணை மூலம் கேட்டும் போது தனது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து அந்த பொய்யான கருத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை உணர வைப்பதற்க்கு தான் அவர்களின் குடும்பத்தையும் சாபம் கோரும் முபாஹலா எனும் பிராத்தணையில் இஸ்லாம் இணைக்க சொல்கிறது
முபாஹலாவில் இரு சாரார் பங்கு பெற்றாலும் அவர்களில் யாருடைய கூற்று உண்மையானது என்று எவராலும் துல்லியமாக அறிந்து கொள்ள இயலாது
காரணம் சாபத்தை கோரி செய்யும் பிராத்தணையை உடனடியாக அங்கீகரித்து அதற்கான பலனை அல்லது அதன் சாப விளைவை முபாஹலா செய்யும் நபர்கள் குடும்பத்தில் உடனடியாக இறைவன் ஏற்படுத்துவான் என்று எந்த உத்திரவாதமும் இல்லை
உடனடியாகவும் அதன் விளைவை சம்மந்தப்பட்டவர்கள் அடையலாம் அல்லது பல வருடம் தாமதமாகவும் அடையலாம் அல்லது மறுமை வரை அவற்றை இறைவன் பிற்படுத்தவும் செய்யலாம்
எனவே முபாஹலாவில் பங்கு பெறும் நபர்களை அதற்க்கு தொடர்பில்லாதவர்கள் அவர்கள் முபாஹலா செய்யும் போது வேடிக்கை பார்ப்பதில் அல்லது அதை விளம்பரம் செய்வதில் எவ்விதமான பலனும் இல்லை
நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் கிருஸ்தவ மதத்தின் பாதிரிமார்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் கொள்கை ரீதியாக முபாஹலாவுக்கு அழைப்பு கொடுத்துள்ளார்களே தவிர அவர்களின் அழைப்பை பாதிரிகள் ஏற்று கொண்டு முபாஹலாவுக்கு முன் வரவும் இல்லை
சுருக்கமாக சொன்னால் நபி( ஸல்) அவர்கள் காலத்தில் முபாஹலா எனும் சாப அழைப்பு ஒரு முறை கூட எவரோடும் நடத்தப்படவில்லை என்பது தான் உண்மையாகும்
சஹாபாக்களும் கூட இதை ஆதாரமாக கொண்டு பொது பிரச்சனைகளுக்கோ அல்லது தனிப்பட்ட விவகாரங்களுக்கோ ஒரு முறை கூட முபாஹலாவை நடை முறை படுத்தவில்லை
மறுமை விசாரணை மீது நம்பிக்கை உள்ள முஸ்லிம்கள் முபாஹலா விசயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை
முபாஹலா செய்வதை வலியுருத்தி குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ அறவே இல்லை
தற்காலத்தில் முபாஹலா என்பது எதற்க்கு செய்ய வேண்டும் ? யாரிடம் செய்ய வேண்டும் ?என்ற எவ்வித மார்க்க ஞானமும் இல்லாது முபாஹலா எனும் வார்த்தையை கூட சரியாக சொல்ல தெரியாதவர்கள் முபாகலா முபாகலா என்று அழைப்பு கொடுக்கும் காட்சியை சாதாரணமாக காண முடிகின்றது
குறிப்பாக தனி மனிதனின் ஒழுக்க விசயத்தில் இவர் விபச்சாரம் செய்தார் அவர் விபச்சாரம் செய்தார் என்று முபாஹலா செய்யுதல் அவசியம் இல்லாத ஒரு வீண் முயற்சியாகும்
காரணம் கண்ணால் பார்த்த சாட்சிகள் நிரூபணமானால் இஸ்லாமிய ஆட்சியில் விபச்சாரம் செய்த நபர்களுக்கு குற்றவியல் தண்டனை தான் வழங்கப்படுமே தவிர அவர்களிடம் முபாஹலா செய்யுங்கள் என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கூட திணிக்க மாட்டார்கள்
இஸ்லாத்தில் முபாஹலா என்பதற்க்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் அது தேவையா இல்லையா என்பதை பல முறை யோசித்து நடை முறை படுத்துவதே அவசியமாகும்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment