பிறர் குறை ஆராய்வதே முதல் குறை

       பிறர் குறை ஆராய்வதே
                 முதல் குறை

                   []=[]=[]=[]=[]=[]
         J . யாஸீன் இம்தாதி
                     ••••••••••                                                       
     Bismillahir Rahmanir Raheem
                      ********
          கட்டுரை எண் 1419
                     *********

காணும் போது குறைகளை நாகரீகமாகவும்  அக்கரை உணர்வுடனும் சம்மந்தப்பட்ட மனிதனிடம் அல்லது அவர் விசயத்தில் பொருப்பாளராக இருக்கும் நபர்களிடம்   சுட்டி காட்டுவது இஸ்லாத்தில் நன்மையை பெற்று தருகின்ற காரியம் ஆகும் 

அதற்காக பிறர் குறைகளை சுட்டி காட்டுவதற்காகவே தன்னை தயார் படுத்தி கொண்டு அலைவதை இஸ்லாம் தீய குணம் உடைய மனிதனாக கண்டிக்கிறது 


இந்த குணாதிசயத்தை வளர்த்தி கொள்ளும் மனிதன் தனது வாழ்வின் நேரத்தை நன்மைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து தவறி விடுவான் 

ஒரு மனிதனின் நிறைகளை மூடி மறைத்து குறைகளில் ஆனந்தம் அடையும் எண்ணத்தை சாத்தான் இயல்பிலேயே  வளர்த்தி விடுவான் 

வெள்ளைத்தாளின் ஓரத்தில் சிறு அளவு கரும்புள்ளி இருப்பதை மட்டுமே சாத்தான் இவனது கண்களுக்கு தென்பட செய்வான்


நாளடைவில் பலரின் தூற்றலுக்கும் வெறுப்புக்கும் ஆளாகி விடுவான் 


عَنْ مُعَاوِيَةَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّكَ اِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ اَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ اَنْ تُفْسِدَهُمْ.

பிறர் குறைகளை நீ ஆராய முற்பட்டால் அவர்களை நீ  நாசமாக்கி விட்டாய் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 

 அறிவிப்பாளர் முஆவியா ரலி

அபூதாவூத் 4244

மறுமை நாளில் வாழ்நாளில் செய்த நன்மைகளை கூட இழந்தவனாக மாறி விடுவான்
என்றும் பல நபிமொழிகள் சான்று பகருகிறது 



      நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்