பதவியை விரும்பாதே

   பதவி மோகத்தை புறம் தள்ளுவீர்
            *************************

பதவிகளை பெறும் எண்ணம் கடுகளவு இருந்தாலும் அந்த எண்ணம் பாவங்களை செய்யவே தூண்டும் 

தன்னை தானாக தேடி வரும் 
பதவியை கூட விரும்புவது முஸ்லிமின் பண்பு அல்ல 

இறையில்லத்தின் சாவி 
உன் வசம் வந்தாலும் கூட வாழ்நாள் முழுவதும் 
நீ அதற்காக எச்சரிக்கை பேணும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறாய் என்பதை கவனித்துக்கொள் 

இப்பதவி இருந்தால் அதை சாதிக்கலாம் 
இதை சாதிக்கலாம் என்று உன்னை சுற்றியிருப்போர்  உனது ஆசையை தூண்டலாம்  மூளைச்சலவை செய்யலாம் 
ஆனால் இஸ்லாம் அவ்வாறு சொல்லவில்லை 

நற்பணிகளை செய்வதற்கு பதவியும் அதிகாரமும் அத்தியாவசியம் இல்லை

மக்களே உன்னை பதவியில் 
அமர வைத்தால்  அதில் இறைவனின் பேருதவி என்றும் இருக்கும் 

பதவியை பெறுவதற்காகவே நீயே  முயற்சி செய்தால் அதில் இறைவனின் பேருதவி நிச்சயம்  
தூரம் இருக்கும்    

பதவிக்கு  பேராசைப்படுவதால்  ஏற்படும் சச்சரவுகளை பிளவுகளை குரோதங்களை அரசியலில் மட்டும் அல்ல தற்காலத்தில் இறையில்லங்களில் கூட பரவலாக பார்த்து வருகிறோம் 


நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள்
காரணம் மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள் என நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7148 


تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதவர்களுக்கே 
நாம் சொந்தமாக்கி வைப்போம் ஏனெனில்  பயபக்தி உடையவர்களுக்கு  (மேலான) 
முடிவு உண்டு

(அல்குர்ஆன் : 28:83)



        நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            24-7-2025



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்