காதல் திருமணம் கசப்பது ஏன்

         காதல் திருமணம் விரைவில்
                       கசப்பது ஏன் 
    ***********************************
                கட்டுரை எண் 1530
                    ************

குடும்பத்தார் ஏற்பாடு செய்து நடக்கும் 
திருமணமாக இருப்பினும் சரி
காதல் திருமணமாக இருப்பினும் சரி
ஆண் பெண் உடலியல் உளவியல் கூறுகளை முறையாக அறியாதவர்கள் வாழ்வில் பிணக்குகள் பிரிவுகள் ஏற்படுவது சகஜம் 

ஆனாலும் நடைமுறையில் காதலித்து திருமணம் செய்தவர்களே குறுகிய காலத்தில்  விவாகரத்தை கோரி நீதிமன்றங்களிலும் சமூக அமைப்புகளிலும் முறையிடுகின்றனர் என்பதே அன்றாடம் அறிந்து வரும் நடைமுறை செய்திகளாகும்

உச்ச நீதிமன்றமும் இந்த தகவலை 
உறுதி செய்துள்ளது 

இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை இளையபருவத்தில் இருக்கும் ஆண் பெண் இருசாராரும் உணருவது காலத்தின் கட்டாயமாக மாறிவுள்ளது 


(முதல் காரணம்)

குடும்பத்தார்கள் முடிவு செய்யப்படும் திருமணங்களில் இரு தரப்பிலும் இருக்கும் சாதக பாதகங்களை இயன்றவரை விசாரித்த
 பிறகே திருமண பேச்சை துவங்குகின்றனர்

காதல் திருமணத்தில் இரு தரப்பிலும் ஏற்படும் இனம்புரியாத  ஈர்ப்பு 
அல்லது சாதகமான சிந்தனை மட்டுமே இருவருக்கும் இடையில்  தொடர்பை உருவாக்குகிறது 


( இரண்டாம் காரணம் )

காதலிப்பதால் ஏற்படும் குருட்டு நம்பிக்கை 
ஒருவரை பற்றி கேள்விபடும் தவறான  செய்திகள் அவர்களை தாண்டி விசாரிக்க முனைவதற்கு இடம் கொடுப்பது இல்லை 
காதலர்களே தங்களுக்குள் ரகசியமாக பேசி 
ஒருவரை ஒருவர் திருப்திபடும் விதம் சமாதானம் அடைகின்றனர்

காரணம் அதை வெளிரங்கமாக விசாரிக்க துவங்கினால் தங்களின் காதல் வெளியுலகில் தெரிந்து விடுமோ என்ற அச்சம் அவர்களின் எதிர்கால  விழிப்புணர்வை முடக்கி விடுகிறது 


( மூன்றாம் காரணம் ) 


காதலர்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் தவறான வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் திருமணத்திற்கு பின் நடைமுறையில் இல்லாத பட்சத்தில்  அதி விரைவில் அவர்களை விரக்தியில் 
தள்ளி விடுகிறது 


( நான்காம் காரணம்)

திருமணத்திற்கு பின் சிறு விசயத்தில் சந்தேகம் வந்தால் கூட காதலிக்கும் போது நம்பிக்கையுடன் அவர்களுக்குள் இருந்த தவறான தீண்டல்களும் பேச்சுக்களும் பரிமாற்றங்களும்  அவர்களின் திருமண வாழ்வின் சந்தேகத்தை வலுப்படுத்தி விடுகிறது 
திருமணத்திற்கு முன் நம்மிடம் 
இப்படித்தானே எல்லை மீறி இருந்தாள் என்று கணவனும் மனைவியும் தங்களின் சந்தேகத்திற்கு வலு சேர்த்திக்கொள்கின்றனர் 


(  ஐந்தாம் காரணம்  )

காதலிக்கும் போது ஏற்படும் மரியாதை குறைந்த வார்த்தைகள் ரசனையாக இருந்த நிலையில்  திருமணத்திற்கு பிறகும் தொடரும் நிலையில்  எதார்த்த வாழ்வில் அந்த வார்த்தைகளை அவமதிப்பாகவும் கவுரவத்திற்கு இழுக்காகவும் அவர்களுக்கு  குறிப்பாக ஆணுக்கு
 தென்பட துவங்கிறது 


(ஆறாம் காரணம்) 


இனக்கவர்ச்சியால் ஏற்படும் காதல் உணர்வு திருமணம் செய்யும் வரை ரசனையை தந்தாலும் திருமணத்திற்கு சில மாதத்திற்கு பின் 
இயல்பு நிலைக்கு வந்த பின் திருமணத்திற்கு முன் எப்படியெல்லாம் இருந்தோம் ஆனால் இப்போது அவ்வாறு இல்லையே என்று ஒருவரை ஒருவர் எதிர்மறையாக சிந்தித்து தங்களுக்குள் 
வெறுப்பை வளரத்திக்கொள்கின்றனர்


ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்ற பழமொழி 
இதை தான் குறிப்பிடுகிறது 


குடும்பத்தார்கள் பார்த்து முடித்து வைக்கும் திருமணத்தில் இது போன்ற சிக்கல்கள்  
பெரும்பாலும்  ஏற்படுவது இல்லை 

காரணம் திருமணத்திற்கு பிறகு ஒருவர் ஒருவரை பற்றிய உண்மைகளை அனுபவத்தில் மட்டுமே உணருகின்றனர் 
வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஜீரணித்துக்கொள்ள கற்றுக்கொள்கின்றனர் 


திரைப்படங்களில் மட்டுமே காதலை புனிதமாக தெய்வீகமாக காதலுக்காக எதையும் இழக்கலாம் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைகளை உண்மை போல் நெடுங்காலமாக வியாபார 
நோக்கில்  சித்தரிக்கப்படுகிறது 


உலகில் எந்த ஒன்றை விடவும் ஒன்று மேலாக தெரியும் என்பதையும் எந்த ஒன்றும் சில காலங்களில் சலித்து இயல்புநிலைக்கு மாறிவிடும்  என்பதையும் நினைவில் வைத்து கொள்வதே நடைமுறை வாழ்வுக்கு உவந்தது 

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌  اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்
அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் 
 நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்கு உணர்கிறவனாகவும் இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 4:35)



       நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                         12-9-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்