அப்துல் காதிர் ஜைலானி( ரஹ்)
இமாம் அப்துல் காதிர் ஜைலானி
( ரஹ்) அவர்களை மதிப்போம்
•••••••••••••••••
கட்டுரை எண் 1146
J . யாஸீன் இம்தாதி
************
ரபியுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டதா
வாருங்கள் முஸ்லிம்களே
மகான் அப்துல்காதிர் ஜைலானி
(ரஹ்) அவர்களின் பெயரில் பள்ளிவாசல்களில் மவ்லித் பாடல்களை படிப்போம்
குத்பிய்யத் ராகமாக படித்து நன்மைகளை குவிப்போம்
மகான்களை மதிப்போம்
வஹ்ஹாபிகளை புறக்கணிப்போம்
இதுவே சில மார்க்க வேடதாரிகளின் வழமையான வாசகம்
இதை தாண்டி
அப்துல் காதிர் ஜைலானி ( ரஹ் ) அவர்களின் உண்மையான வரலாற்றை மக்கள் புரிகின்ற மொழியில் சபைகளில் விளக்கி பேசியிருக்கிறார்களா ?
அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கு வாழ்நாளில் செய்த தியாகங்களை விளக்கி சொல்லி இருக்கிறார்களா ?
அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் தனது மகனாருக்கு செய்த உபதேசத்தில்
ஏகத்துவ சிந்தனையை பற்றியும் இறைவனுக்கு இணை வைப்பதால் மறுமையில் ஏற்படவிருக்கும் விளைவுகளை பற்றியும் விளக்கி பேசியிருப்பதை பாமர மக்கள் சபையில் விளக்கி பேசியிருக்கிறார்களா ?
எந்த கொள்கையை
இமாம் அப்துல் காதிர் ஜைலானி ( ரஹ் ) அவர்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார் என்பதை பகிரங்கப்படுத்தி இருக்கிறார்களா ?
இமாம் அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் எழுதிய
அல் பத்ஹுர் ரப்பானி
வல் பைலுர் ரஹ்மானி
மற்றும் அவர் நிகழ்த்திய குத்பா உரைகளை மொழி பெயர்த்து
இது நாள் வரை மக்கள் வசம் ஒப்படைத்துள்ளார்களா ?
குறைந்த பட்சம் அவர்கள் பெயரால் பிற்காலத்தில் கவிஞர்களால் புனையப்பட்ட மவ்லித் கவிதைகளின் வரிகளை அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்களே அங்கீகரித்திருப்பாரா என்று சுயமாக சிந்திதனை செய்திருப்பார்களா ?
வருடம் தவறாது ரபியுல் ஆகிர் மாதத்தில் படிக்கப்படும் மவ்லிதை போன்று
வாழ்நாளில் ஒரு முறையேனும்
இமாம் அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் சுயமாக எழுதிய அறிவுரை புத்தகங்களை படித்து முடித்திருப்பார்களா ?
என்ற நியாயமான எதிர் கேள்விகளை அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்களை மகானாக மதிக்கும்
பொது மக்களிடமே விட்டு விடுகிறேன்
அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் பெயரால் புனையப்பட்ட கற்பனை கதைகளை சினிமா கதாசிரியன் விட்டாலாச்சியாரை விட கற்பனையில் மிஞ்சிய மூடத்தனமான கப்ஸாக்களை உண்மை என்று கருதி பரப்பும் சில உலமா கூட்டத்திற்கு
இமாம் அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்களின் உண்மை சரித்திரத்தை படிப்பதற்கும் பகிரங்கப்படுத்துவதற்க்கும் மக்கள் சபையில் பரப்புவதற்கும் உள்ளம் கசக்கிறதோ ?
வருடம் ஒரு முறை அப்துல்காதிர் ஜைலானி (ரஹ்) அவர்கள் பெயரால் மார்க்க ஞானம் இல்லாத அரபு கவிஞன் எழுதிய வரம்பு மீறிய பாடல்களை அதன் பொருள் மறைத்து வெறுமனே ராகத்துடன் பாடி மக்களின் சிந்தனையை மூளைச்சலவை செய்து வழிகெடுத்து வைத்திருப்பதை தவிர்த்து விட்டு
இமாம் அப்துல் காதிர் ஜைலானி (ரஹ்) அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் தனிமையில் கையேந்துங்கள் மக்களே
என்று முஸ்லிம்களுக்கு திருமறை குர்ஆன் கூறும் அறிவுரைகளை எடுத்து கூறுங்கள்
அவர்கள் பெயரால் நடைபெறும் ஊர்வலங்கள் சந்தனக்கூடு திருவிழாக்கள் அதை ஒட்டிய அனாச்சார சீர்கேடுகளை குப்பையில் வீச சொல்லுங்கள்
மகான்களை இறைவன் போல் சித்தரித்து அவர்களையே நேரடியாக அழைத்து பிராத்தித்து மறுமையில் நிரந்தர நரகத்திற்கு இழுத்து செல்லும் மடத்தனமான செயலை கழிவறையில் போட்டு மூட சொல்லுங்கள்
இது தான் மகான்களை நல்லடியார்களை மதிக்கும் சரியான வழிமுறை
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்று தந்த மார்க்க நெறிமுறை
رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
எங்கள் இறைவனே! எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்
(அல்குர்ஆன் : 59:10)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment