இணைவைப்பு

        இறைக்கல்வியே அடிப்படை
                  ****************
                 கட்டுரை எண் 1508
                         ***********

அல்லாஹ்  என்பவன் யார்
அவனது ஆற்றல்கள் என்ன
இணை வைப்பு என்றால் என்ன
இணை வைப்பு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன
என்பதை அடிப்படை கல்வியாக குர்ஆன் சுன்னா சான்றுகளுடன் பிள்ளைகளுக்கு போதிக்காத பெற்றோர்கள் 
நிச்சயம் மறுமை நாளில் 
தன் கண் முன்னே பிள்ளைகள் 
நரகில் கருகுதுவதை  காண்பார்கள்

இறைவன் இருக்கின்றான்
என்று சொல்வது பெருமை இல்லை
இறைவனின் ஆற்றலை
எந்த வகையிலும் எவருக்கும் எதற்கும்
மனதளவிலும் செயல் வடிவிலும் 
தர மாட்டேன் என்று முடிவு செய்பவர்களே ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் முஃமீன்கள் 

மக்கத்து காஃபிர்களும்
நபிகளாரை தூற்றியவர்களும்
அல்லாஹ்வை மறுத்தவர்கள் அல்ல

நபிகளார் பூமியில் பிறப்பதற்கு முன்பே நபிகளாரின் தந்தைக்கு அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை)  என்ற அழகான பெயரை சூட்டியிருந்தவர்களே அவர்கள் 


இணைவைப்பு என்பது
இறைவன் விசயத்தில் செய்யும் கொடும் விபச்சாரம் 

விபச்சாரத்திற்கு பல பெயர்களை
சூட்டிக்கொள்வதால் விபச்சாரம் 
அனுமதிக்கப்பட்டதாக மாறி விடாது

இணை வைப்புக்கு 
பல சமாதானங்களை ஏற்படுத்திக்கொள்வதால் 
இணை வைப்பு இப்ராஹீம் ( அலை ) அவர்கள் போதித்த  ஏகத்துவமாக 
மாறி விடாது 

இணைவைப்பில் இருந்து மீளாது ஒருவன் மரணத்தை அடைந்து விட்டால் 
அவன் வாழும் போது ஆயிரமாயிரம்
நன்மைகளை குவித்திருந்தாலும் 
பல பள்ளிவாசல்களை சொந்தமாக கட்டி கொடுத்திருந்தாலும் 
அவைகள் குப்பைகளுக்கு சமமானவையே


வாய்க்கு ருசியான பிரியாணியை பரிமாறும் ஒருவன்
சாப்பிடுபவன் கண்ணத்தில் செருப்பில் அறைவதை விட கேவலமானதே
இறைவனை நம்பும் ஒருவன்
இறைவனுக்கு இணை வைக்கும் 
மாபாதக செயலில்  ஈடுபடுவது


اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا‏

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்

(அல்குர்ஆன் : 4:116)


وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

(நபியே!) உனக்கும் உனக்கு முன்னிருந்த ( இறைதூதர்களுக்கும்) மெய்யாகவே அறிவிக்கப்பட்டது

( அல்லாஹ்வுக்கு) நீ இணை வைத்தால் உனது  நன்மைகள் அனைத்தும் அழிந்து
நிச்சயமாக நீர் நஷ்டமடைந்து விடுவீர்  என்பதாகும் 

(அல்குர்ஆன் : 39:65)


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           10-1-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்