தர்ஹா இணைவைப்பு

             ஏகத்துவ கொள்கை
                 ****************
               கட்டுரை எண் 1532
                    **************

மனித உடலுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ 
அது போல் ஒரு முஸ்லிமின்  முக்கியமான 
ஆணிவேர் நம்பிக்கை ஏகத்துவமாகும்

இஸ்லாத்தை நம்புவதற்கு 
மூல காரணம் அதன் ஏகத்துவ கொள்கையே

இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கு 
பெயரும் ஏகத்துவம் அல்ல
இறைவனை வணங்குவதற்கு பெயரும் 
ஏகத்துவம் அல்ல 

ஏகத்துவத்திற்கு இதுவே 
அடிப்படை என்றால் உலகில் நாத்தீகர்களை தவிர அனைத்து மதத்தவர்களும் ஏகத்துவவாதிகளே 
காரணம் ஆன்மீகவாதிகள் இறைவனை 
மறுப்பதும் இல்லை 
வணங்காது இருப்பதும் இல்லை 

அப்படியெனில் ஏகத்துவம் 
என்றால் என்ன ?

இறைவனால் வழங்கப்பட்ட தூதுத்துவம் 
ஏகத்துவத்திற்கு கற்பிக்கும் இலக்கணங்களை 
அச்சு பிசகாது மனஉறுதியுடன் எவ்வித முரண்பாடும் இன்றி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு 
பெயரே ஏகத்துவ கொள்கை



இணை வைப்பு எனும் மாபாவத்திற்கு இஸ்லாம் கற்பிக்கும் காரணங்களை நஞ்சு போல் வெறுத்து ஒதுக்குவதே ஏகத்துவ கொள்கை 

ஒரு மனிதன் அறியாமையில் தீண்டினாலும் 
நெருப்பு சுடும்
அறிந்தே தீண்டினாலும் நெருப்பு சுடும்

அதே போல் ஏகத்துவத்திற்கு 
எதிரான எந்த செயலை 
எந்த வடிவத்தில்  நடைமுறைபடுத்தினாலும் 
ஏகத்துவம் கசடுபடிந்ததாக மாறிவிடுவதுடன் மறுமையில்   நிரந்தரமான நரகத்தில் தள்ளி  விடும்



நல்லடியார்களிடம் நேரடியாக 
துஆ செய்வது 
அவர்களின் பொருட்டால் 
துஆ செய்வது 
யாவும் இஸ்லாம் இணைவைத்தல் என்ற பெரும்பாவத்திற்கு  எடுத்துக்காட்டாக கற்பிக்கும்  செயலாகும்

அறுக்கப்படும் எந்த பிராணிகளையும்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுப்பதும் 
அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் குறிக்கோளாக கொண்டு  அறுக்கப்பட்டதாகவும்
இருக்க வேண்டும்

மகான்களின் பெயரால் நேர்ச்சை செய்வது 
விழாக்கள் எடுக்கப்படும் குறிப்பிட்ட  இடத்திற்கு சென்று கால்நடைகளை  குர்பானி கொடுப்பது யாவும் இஸ்லாம் இணைவைத்தல் என்ற பெரும்பாவத்திற்கு எடுத்துக்காட்டாக கற்பிக்கும் செயலாகும்  


அல்லாஹ்வின் பெயர் குறிப்பிடாது கால்நடைகளை  அறுப்பதும் 
அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி
கோயில்களில் தர்ஹாக்களில் கால்நடைகளை  அறுப்பதும் பாவத்தில் சமமானவையே 


யாரோ ஒருவரை ஈன்றெடுத்த 
தாய் என்று அழைப்பதும் 
தாய்கு நிகராக வேறு ஒருவரை கணிப்பதும் அறிவீனத்தின் உச்சமே 

அல்லாஹ்விடம் கையேந்தி 
அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடமும் 
ஒரு முஸ்லிம் கையேந்தினால் அவன் மகானை மதித்தான்  என்பது பொருள் அல்ல
மாறாக அல்லாஹ்வின் அந்தஸ்த்தை மகானை மதிக்கிறோம் எனும் பெயரில்  குறைத்தான் 
என்பதே பொருள் 


ஒருவரின் பரிந்துரையை ஏற்று 
அருள் வழங்க அல்லாஹ் கருணையற்றவனும் அல்ல
மகானின் பரிந்துரையை கேட்டு 
ஒரு மனிதனின் தேவையை அறிய 
அல்லாஹ் ஞானமற்றவனும் அல்ல

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பரிந்துரை வசனங்கள்  அதிகாரம் யாவும்  இறைவனுக்கு சொந்தமானது என்ற பாடத்தை கற்பிக்கவே தவிர

பரிந்துரைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பரிந்துரையை ஏற்றே  
அடியார்களுக்கு அல்லாஹ்
அருள் வழங்குவான் என்பதற்காக அல்ல


எந்த சந்தர்ப்பத்திலும் 
ஏகத்துவத்தை இழந்து விடாதீர் 
ஏகத்துவத்தில் மாசு படிய விடாதீர்


இன்று ஏகத்துவத்தை போதிக்கும் அறிஞர்களை முஸ்லிம்களை விட வேறு எவரும் வரம்பு 
மீறி விமர்சிப்பது இல்லை

சிர்க் என்ற இணைவைக்கும் பெரும்பாவத்தை சுன்னத் என்று இறையில்லங்களில் ஆதரித்து 
பயான் பேசும் அளவு சாத்தான் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் அந்நியப்படுத்தி வருகிறான் 



اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‌‏

வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்)

(அல்குர்ஆன் : 6:79)


ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும் தன் அடியார்களில் 
அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்
(பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால்
அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்துவிடும்

(அல்குர்ஆன் : 6:88)

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

மேலும் அவர்களில் அநேகர் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் இருக்கின்ற முஃமீன்களாகவே இருக்கின்றனர்

(அல்குர்ஆன் : 12:106)


    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            25-9-2024



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்