இணைவைத்தல்
இணைவைத்தலே பாவத்தின்
தலைமையகம்
****************
கட்டுரை எண் 1526
************
இணை வைத்தல் என்ற பெரும்பாவத்தின் இலக்கணங்களை குர்ஆன் சுன்னா முறையில்
புரிய இன்னும் முயற்சிக்காதவன்
இஸ்லாத்தின் பெயரில் பயணிப்பதில் கடுகளவும் பயன் இல்லை
இறைவனை மறுக்கும்
நாத்தீகனும்
பல தெய்வ வழிபாடுகளை செய்யும் ஆத்தீகனும்
இணை வைத்தல் என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிம்களும் பாவத்தின் தரத்தில் சமமானவர்களே
நிரந்தர நரகை அடைவதில் கூட்டாளிகளே
இஸ்லாமிய அடிப்படை
அறிவை கூட சரியாக புரியாதவர்கள்
இணை வைக்கும் கொடூர பாவத்தை நியாயப்படுத்தும் தன்மை உடையவர்கள்
ஆலீம்களாக சமூகத்தில் வலம் வருவதை விட கேவலமான செயல் ஏதும் இல்லை
(லாயிலாஹா இல்லல்லாஹ்)
அல்லாஹ்வை தவிர வேறு
நாயன் இல்லை என்பதே இஸ்லாமிய இறைக்கொள்கையே தவிர
அல்லாஹ்வும் நாயன் என்பதல்ல
இஸ்லாமிய இறைக்கொள்கை
(அவ்லியாக்கள்) மகான்கள் இறைவனின் நல்லடியார்களே தவிர அல்லாஹ்வின்
அவதாரங்கள் அல்ல
இறையருளை பெற்றுத்தரும் புரோக்கர்களும் அல்ல
மகான்கள் நினைப்பதை செய்து கொடுக்க அல்லாஹ்வும் அவ்லியாக்களின் பணியாளன் அல்ல
அவ்லியாக்களின் பரிந்துறை பெயரில் பாக்கியங்களை வழங்க அல்லாஹ் அடியார்கள் மீது இரக்கமற்றவனும் அல்ல
மகான்களை மதிப்பது என்பது வேறு
மகான்களை மூலமாக்கி இஸ்லாமிய இறைக்கொள்கையை செயல்களால்
மிதிப்பது என்பது வேறு
சூரா பாத்திஹாவின் பொருளையும்
சூரா இக்லாசின் பொருளையும்
ஒரு முறை சுயமாக விளங்கி படிப்பவனுக்கு இக்கட்டுரை ஆழமான சிந்தனையை
நிச்சயம் பெற்றுத்தரும்
وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ وَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்
ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள் இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்
அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்)
(அல்குர்ஆன் : 2:165)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
19-8-2024
Comments
Post a Comment