மனிதனும் மரணமும்
ஜெயலலிதா மருத்துவ செலவு
அறிக்கையும்
விவாதிக்கும்
அப்பாவிகளின் அறியாமையும்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1218
22 -11-18 சனி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஜெயலலிதா சிகிச்சைக்கான செலவு விவரங்கள் அடங்கிய ரசீது நகலுடன் அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது
அதன் விவரம் வருமாறு
மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற போது
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்றும்
ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களுக்கான
உணவு கட்டணம் ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 என்றும் அந்த ரசீதில் கூறப்பட்டுள்ளது
--------------------
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் இந்த செலவுகளை பற்றிய அறிக்கைகளே பொதுமக்களால் பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது
கையேந்தி பவன்களிலும் தெருவோர டீகடைகளிலும் 50 ரூபாய்க்கு உணவு சாப்பிட்டு பழக்கப்பட்ட பொது மக்களுக்கு இந்த அறிக்கைகள் ஆச்சரியத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை
மக்களின் வரிப்பணத்தில் இந்த செலவுகள் செய்யப்பட்டு இருந்தால் நிச்சயம் அது விவாதத்திற்க்கு உரியது தான்
அதே நேரம் கோடிகளில் புரளும் ஆட்சியாளர்களுக்கும்
தூசி இல்லாத ஏசி அறையில் கழிவறை அமைத்து சொகுசாக வாழும் கோடீஸ்வரர்களுக்கும் இது ஆச்சரியம் இல்லை என்பதை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை
விசாரணை எனும் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டதால் ஜெயலலிதா விவகாரம் பெரிதாக பேசப்படுகிறதே தவிர அநேகமான அரசியல் புள்ளிகளின் நிலமையும் இது தான் என்பதை மறந்து விட கூடாது
சிறு பிள்ளைதனமாக ஞானமின்றி இவைகளை பற்றி விவாதிப்பது அவசியமற்றது
ஜெயலலிதா மருத்துவமனையில் சாப்பிட்ட ஒரு இட்லின் விலை 500 ரூபாயா ? 300 ரூபாயா ? என்று கேட்கும் இவர்கள் இதை விட ஆச்சரியம் தரும் தகவல்களை கேள்வி பட்டது இல்லை என்றே கருதுகிறேன்
அவ்வகையில் இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மனைவி நீதா என்பவர் தினம் அருந்தும் ஒரு நேர கப் சாயாவின் விலை
( 3-1/5 ) மூன்றரை இலட்சம்
காணொளி லின்ங்
https://youtu.be/UZ80o7e5MjY
நீதாவின் மகன் ஆனந்த்
அருந்தும் ஒரு நாள்
Magallan விஸ்கியின் விலை
ஒன்பது கோடி
https://youtu.be/XoIJgo8Fefo
இன்னும் இது போல் பல ஆடம்பர தகவல்கள் உள்ளது
உங்களுக்கு அதை காணும் போது தலை சுற்றும் என்பதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்
இறுதியாக இதன் மூலம் நாம் பெற வேண்டிய பாடம் ஒன்று தான்
அந்த பாடத்தை மனிதர்களில் பலர்கள் உணருவதில்லை
கோடான கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தாலும் அரசியல் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருந்தாலும் இறைவன் தீர்மானித்து விட்ட நோயில் இருந்தும் மரணத்தில் இருந்தும் எந்த மனிதனாலும் தப்பிக்க இயலாது
இவர்கள் அடக்கப்படும் புதைகுழிக்கு மேல் ஆடம்பரமான மணிமண்டபங்கள் எழுப்பப்பட்டு இருந்தாலும் அடக்கப்பட்ட கோடீஸ்வரனின் உடல் புழுக்களுக்கும் கொடூர பூச்சிகளுக்கும் தான் உணவாக பயன்பட்டு கொண்டுள்ளது
பல்லாயிரம் கோடிகளுக்கு உரிமை பட்ட கணவன் இறந்து விட்டான் என்பதற்காக
அவனது உடலுக்கு அருகாமையில் நானும் பாதுகாவலுக்கு தினமும் இருக்கின்றேன் என்று அந்த கோடீஸ்வரரின் மனைவி கூட சொல்ல மாட்டாள்
நேசமான ஒரு மனிதனின் உடலில் உள்ள உயிர் போனால் அவனை உயிராக நேசிக்கும் மனிதன் தனது உடலில் உள்ள தலை மயிருக்கும் கூட அவன் மதிக்கும் மனிதனை மதிக்க போவது இல்லை
இது தான் மனித வாழ்வு
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள், ஆண் மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்
(ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்
அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு
(அல்குர்ஆன் : 3:14)
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்
பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்
(என்று) (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 62:8)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment