மரணத்தகவலில் மறைமுக நாத்தீகம்
மரணத்தகவலில் மறைமுகமான
நாத்தீகம்
***********************
கட்டுரை எண் 1522
*************
ஒரு மனிதனின் மரணத்திற்கு நோய்களை
மூல காரணமாக குறிப்பிடுவதும் மறைமுகமான நாத்தீகத்தின் அடையாளமே
நோயால் தாக்கப்படுபவர்களையே மரணம் தழுவும் என்றால் ஆரோக்யமானவர்களும் குழந்தைகளும் சுறுசுறுப்பான இளைஞர்களும் மரணத்தை தழுவக்கூடாது என்பதே எதார்த்த உண்மை
ஆனால் உலகில் அவ்வாறு நிகழ்வதும் இல்லை
மனிதனின் மரணத்திற்கு காரணம் கற்பிப்பது பிறமனிதன் சமாதானம் அடைவதற்கே தவிர மரணத்திற்கே அவைகளை மூல காரணமாக கற்பிப்பதற்கு அல்ல
புற்று நோயால் தாக்கப்பட்டவர்களும்
மரணத்தை அடைவார்கள்
புற்று நோயால் தாக்கப்படாதவர்களும் மரணத்தை அடைவார்கள்
ஜீவன்களின் மரணத்திற்கு இறைவன் விதித்துள்ள விதியே காரணமே தவிர வேறு எக்காரணத்தையும் இறைநம்பிக்கையாளன் மரண தகவலை கேள்விப்படும் பொழுது கற்பிக்கக்கூடாது
அதனால் தான் மரணத்தகவலை கேள்விபட்டவுடன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
( நாங்களும் இறைவன் விதித்துள்ள தவணையில் மரணத்தை அடைபவர்களே நீங்கள் இறைவன் விதித்துள்ள மரணத்தை தற்போது அடைந்து விட்டீர்கள் என்பதையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறோம் )
மரணத்தை கண்டு எவரும் அஞ்சத்தேவையில்லை
காரணம் மரணத்திற்கு பின் கொடுங்கோலனை மனிதன் சந்திக்க செல்வதில்லை
அரக்கனை சந்திக்க செல்வதில்லை
அயோக்கியனை சந்திக்க செல்வதில்லை
மாறாக மரணத்திற்கு பின்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவனாகிய இறைவனிடமே திரும்ப செல்கிறோம்
அத்தகைய இறைவனை சந்திக்க செல்லும் மனிதன் இறைதிருப்தியை பெற்றுத்தரும் அம்சங்களை வாழ்வில் கடைபிடித்தோமா என்ற சுய பரிசோதனையில் ஈடுபடுவதே
உயிருடன் வாழும் இறை நம்பிக்கையாளனின் அம்சமாக வெளிப்பட வேண்டும்
مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு
சுகமேயாகும்
பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும்
வர வேண்டியிருக்கிறது
அப்பொழுது அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக
நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்
(அல்குர்ஆன் : 10:70)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
19-9-2025
Comments
Post a Comment