உயிர்
உயிரே உயிரே
*******
18-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1345
====================
மனிதன் வாழ்நாள் முழுவதும் செயல்படுவதற்கு அடிப்படையாக திகழும் உயிர் என்ற பொக்கிசத்தை
ஒரு வினாடியிலும் குறைவான நேரத்தில் கைப்பற்றும் சர்வ வல்லமை கொண்டவனே இறைவன்
எதிலும் தர்க்கத்தை செய்து ஏற்று கொள்ளும் மனிதன்
அல்லது மறுக்கும் மனிதன் தர்க்கமே செய்யாமல் ஒன்றிணைந்து ஒப்புக்கொண்ட ஒரே விடயம் மரணம் வெல்லும் மனிதன் எவனும் இல்லை என்பது மட்டுமே
இறைவனின் நெருக்கம் பெற்ற இறைதூதர்களுக்கே மரணத்தில் இருந்து விதிவிலக்கு கொடுக்காத இறைவனின் பார்வையில் நம்மின் உயிர் மிகவும் துச்சமானதே அர்ப்பமானதே
வாழ்ந்து சலித்தோர் பலர் இன்னும் மரணத்தை தழுவாது இருப்பதும் வாழ வேண்டிய பலர் நம்மை விட்டு திடீரென்று மறைவதும் இறைவனின் தீர்மானம் தான்
மறுமையை நம்பாத மனிதனுக்கு அவரது மரணமே முற்றுப்புள்ளி
மறுமையை நம்பிய மனிதனுக்கு அவனது மரணமே நிரந்தர வாழ்வின் துவக்க புள்ளி
உயிர் உயிர் உயிர்
உயிரை உருவாக்க முடியுமா எனும் ஆராய்சி செய்த மனிதன் உடலை விட்டு பிரியும் உயிரை கூட சில காலம் தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியாது என்பதை தான் இழிந்த நிலையில் ஏற்று கொண்டுள்ளான்
நீ சொல் சிந்தித்து சொல்
உன் உயிரின் நிறம் என்ன
உன் உயிரின் மணம் என்ன
உன் உயிரின் எடை என்ன
உன் உயிரின் மூல பொருள் என்ன
உன் உயிர் உன் உடலில் எந்த இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளது
அதை தஞ்சம் அடைய செய்தவன் யார் ?
தஞ்சமடைந்த உயிரை உடலில் இருந்து உருவி எடுப்பவன் யார் ?
இதெற்கெல்லாம் விடை தெரியாது இறைவனை மறுப்பதோ இறை கட்டளையை புறக்கணிப்பதோ ஆணவம் கொண்டு அலைவதோ அறிவிலியின் ஒப்பற்ற அடையாளம்
ஒப்பில்லாத இறைவனை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு உன்னை நீயே இறையடிமை என்பதை உணரும் தருவாயில் தான் நீ நன்றியுள்ள மனிதனாகவே மாற முடியும்
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ
(யாதொரு பொருளையும் நாம் படைக்க நாடினால்) நம்முடைய கட்டளை(யெல்லாம்) கண் சிமிட்டுவதைப் போன்ற ஒன்றுதான்
(அல்குர்ஆன் : 54:50)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment