மரணமா சாத்தானா

       மரண சிந்தனையை முடக்கும்
        ஆற்றல் உள்ளவனே சாத்தான்
               *******************
ஆன்மீகவாதியாக இருந்தாலும்
நாத்தீகவாதியாக இருந்தாலும்
ஆரோக்யத்தில் சீராக இருந்தாலும்
உடல் வலிமையில் 
உயர்வாக இருந்தாலும் 
பதவியில் முன்னனியில் இருந்தாலும்


மரணம் அடைந்த உடலை 
காணும் போது சில வினாடிகள் 
அவனது கற்பனை நாமும் மரணம் அடைந்தால் இது போல் தான் காட்சி பொருளாவோம்  என்று கருதும்

அந்த நேரத்தில் தான்
ஒவ்வொரு மனிதனும் 
தனது தோல்வியை அவனை அறியாமல் ஒப்பு கொள்கிறான் 

அந்த எண்ணங்களை கூட
சில நிமிடங்களில் 
சீரழிக்கும் ஆற்றல்
சாத்தானுக்கு உண்டு

சாத்தான் மரணத்தை விட
மோசமானவன் என்பது
இதன் மூலமே நிரூபணம் ஆகும்

அறுபது வயதை எட்டும் போது
தன்னையே மனிதன் வெறுக்க துவங்குவான் 

அவனுக்கு ஐநூறு வயதை
இறைவன் கொடுத்தால்
அதை விட நரகம் உலகில்
அவனுக்கு ஏதும் இல்லை 

இதை வெறுமனே படித்தால்
நீ கடந்து செல்வாய்
படித்த பின் சிந்தித்தால்
இப்பதிவின் ஆழத்தை 
நீ உணர்ந்து கொள்வாய் 


وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ اَفَلَا يَعْقِلُوْنَ‏

மேலும் எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ
அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்
அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா  ?

(அல்குர்ஆன் : 36:68)



    நட்புடன்  J . யாஸீன் ( இம்தாதி )


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்