அதிபதியே சுர்ஜித் அருகில்

    அதிபதியே அரசாங்கத்தை விட
      !!   சுர்ஜித் ஆன்மா அருகில்  !!

                 🚧 🚧 🚧 🚧 🚧
    30-10-19 J . Yaseen iMthadhi
                    
           **********************                      
            கட்டுரை எண் 1276
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                       !!!!!!!!!!!!!!!!!

இக்கட்டில் சிக்கிய மனிதனை காப்பாற்ற

விபத்தில் தவிக்கும் மனிதனை காப்பாற்ற

சக்ராத்தில் துடிக்கும் மனிதனை காப்பாற்ற

அறிவாளிகளும் அறிவு நுட்பங்களும் அவர்களுக்கு அருகாமையில் இருந்தாலும்

அவர்களை விட மிக அருகாமையில் இறைவனாகிய நான் தான் இருக்கிறேன்
என்ற குர்ஆன் வசனம் தான் நான் வியந்து பல முறை அச்சத்தோடு படிக்கும் குர்ஆன் வசனம்

பத்து அடியில் ஆழ்துளை கிணற்றில் உயிரோடு  சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை காப்பாற்ற உயர்ரகமான தொழில் நுட்ப கருவிகள் அந்த சிறுவனை  நெருங்கும் போது அந்த கருவியை விட அந்த சிறுவனுக்கு மிகவும்  அருகாமையில் இருந்தவன் இறைவனே

வல்லமையுள்ள கருவிகளை பூமியில் தரை இறக்கும் போது அந்த கருவிகளுக்கு அருகாமையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கருவியை முடமாக்கி மேல் மட்டத்தில் இருந்த  சிறுவனை சுர்ஜித்தை  அதை விட கீழ் மட்டத்தில் இறக்கி தன் வல்லமையோடு அழைத்து சென்றவன் இறைவனே

நான்கு நாட்கள் அரசாங்க போராட்டத்தை தவிடுபொடியாக்கி இறுதியில் இறைவனே அரசாங்கத்தை வெற்றி அடைந்து சுர்ஜித்தை தன்னளவில் இழுத்து கொண்டான்

சிறுவனை காப்பாற்ற வல்லுனர்கள் பூமியின் கீழ்நோக்கி அனுப்பிய ஏர்லாக்கும் எடுபடவில்லை

ராஜாங்க தந்திரங்களும் எடுபடவில்லை

அரசாங்கமும் அதிகாரிகளும் தீயணைப்பு படை வீரர்களும் தொண்டு நிறுவனங்களும் ஆய்வாளர்களும் நடுக்காட்டு பட்டி ஊரையே காலி செய்து விட்டு தனது  இயலாமையை ஒப்பு கொண்டு இழிவாக ஊரை விட்டே வெளியேறினர்

இது தான் சிறுவன் சுர்ஜித் விவகாரத்தில் நடந்த உண்மை

இப்போது படியுங்கள் குர்ஆன் வசனத்தை உண்மையில் உங்கள் ஈமான் மெய்சிலிர்க்கும்

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏ 
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

وَاَنْتُمْ حِيْنَٮِٕذٍ تَـنْظُرُوْنَۙ‏ 
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ‏ 

ஆயினும், நாமோ அவனுக்கு ( சுஜித்தின் உயிருக்கு)  உங்களை விட சமீபமாக இருக்கிறோம் எனினும் நீங்கள் ( நான் அவன் அருகில் இருப்பதை  ) பார்க்கவில்லை

فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ‏ 
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால்

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
நீங்கள் உண்மையாளராக இருப்பின் (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே

      (அல்குர்ஆன் : 56:84-87)


وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ‌ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
மேலும் வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்

        (அல்குர்ஆன் : 16:77)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்