மரணம் தரும் பாடம்
மரணம் தரும் பாடம்
****************
கட்டுரை எண் 1411
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
நல்லா தான் இருந்தார்
திடீர்னு மரணமாயிருட்டாருங்க
இந்த சொல்லை அடிக்கடி கேள்வி பட்டு வருகிறோம்
உடல் நிலை மோசமாக இருந்தவர் மரணத்தை தழுவுவது ஆச்சரியம் இல்லை என்பதே இந்த பதிலுக்கு மூல காரணம்
ஆரோக்யமாக இருப்பவர்
திடீர் மரணத்தை தழுவினால் அதில் தான் படிப்பினை உண்டு
ஆரோக்யமாக நடமாடிய அந்த மனிதனின் உடலை பலவீனபடுத்திய சக்தி எது ?
அந்த ஆரோக்யமான உடலுக்கு மரணத்தை விதித்த சக்தி எது ?
எல்லாமே இயற்கை என்றால் ஆரோக்யம் என்பது மரணத்துக்கு நெருக்கமான ஒன்றா ?
அல்லது பலவீனம் என்பது மரணத்திற்கு நெருக்கமான ஒன்றா ?
அறிவால் விளக்கம் சொல்ல இயலாத இடத்தில் தான் இறைவன் தனது ஆற்றல் மூலம் மனித சமூகத்திற்கு விளக்கம் சொல்கிறான்
மனிதனின் மமதையை மரணத்தின் மூலம் இறைவன் தோல்வி அடைய செய்கிறான்
சொந்தங்களும் பந்தங்களும் மருத்துவர்களும் மருந்துகளும் மனிதனின் உடல் நெருக்கத்தில் இருந்தாலும்
அந்த மனித ஆன்மாவின் நெருக்கத்தில் இறைவனே மிகவும் அருகில் உள்ளான் என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்து வருகிறான்
உயிரை படைத்தவன்
அந்த உயிரை மனித உடலுக்குள் நுழைத்தவன்
அதை செயல்பட அமைத்தவன் இறைவன் என்பதால் தான்
அவன் விரும்பிய நேரத்தில் அவன் வழங்கிய உயிரை கைப்பற்றி கொள்கிறான்
மனித உடலை பெருக்கவும்
அதை வளர்க்கவும் நேரடியாக மனிதனின் முயற்சி இருப்பதால் தான் அந்த உடலை மட்டும் இறுதியில் மனிதனின் வசமே ஒப்படைத்து விடுகிறான்
மனிதனின் வசம் ஒப்படைத்த அந்த உடல் சில மணி நேரத்தில் அதை அணைத்து வாழ்ந்த உறவுகளை கூட வெறுக்க செய்கிறது
பாலூட்டி சீராட்டி வளர்த்திய உறவுகளும் அந்த உடல் தங்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து இறைவன் படைத்த மண்ணுக்குள்ளே அந்த உடலை இறுக்கமாக நுழைத்து விடுகின்றனர்
அதை வழி மொழிந்து மனித சமூகமே மரண இல்லத்திற்கு படை எடுத்து செல்கிறது
இதுவே மனித வாழ்வு
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ
நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே
(அல்குர்ஆன் : 4:78)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment