சுர்ஜித் வில்சன் மரணம் தரும் பாடம்
சிறுவன் சுர்ஜித் வில்சன்
மரணம் தந்த இறுதி பாடம்
🚧 🚧 🚧 🚧 🚧
27-10-19 J . Yaseen iMthadhi
**********************
கட்டுரை எண் 1276
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
மனிதன் விஞ்ஞானத்தில் அறிவு ஆற்றலில் உச்சாணியை தொட்டாலும் இறைவனின் தீர்மானம் எதுவோ அதற்கு ஏற்ற நிலையில் தான் மனிதனின் முயற்சிகளும் முடிவுகளும் அமையும்
இதில் தற்காப்பு ஏற்பாடுகளை தவிர அதன் முடிவுகளில் வேறு எந்த மாற்றத்தையும் ஒட்டு மொத்த மனித சமூகத்தால் செய்ய முடியாது
இதுவே இறைநம்பிக்கையாளனின் ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்
ஆள்துளை கிணற்றில் சிக்கி பல கட்ட முயற்சிக்கு பிறகும் மரணத்தை தழுவிய நடுக்காட்டுபட்டி சிறுவன் சுர்ஜித் வில்சனின் மரண முடிவுரை இதை தான் படிப்பினையாக உலக மக்களுக்கு சொல்கிறது
இலட்சக்கணக்கான குடிமக்கள் இறைவனிடம் சிறுவனுக்காக பிராத்தணை செய்தாலும்
நேரடி களத்தில் பணியாற்றிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உயர்ரகமான கருவிகளின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை அளவு இறைவன் மேல் வைக்கவில்லை என்பதால் தான் குடிமக்களை இறைவனிடம் பிராத்தணை செய்யுங்கள் என்றோ அல்லது நாங்களும் இறைவனிடம் பிராத்தணை செய்து கொண்டுள்ளோம் என்றோ ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை
கருவறையின் இருள் அறையில் எவருடைய கண்காணிப்பும் இல்லாது குழந்தையை பாதுகாத்து மனித சமுதாயத்தை காக்கும் இறைவனுக்கு அவன் படைத்த பூமியின் புதை குழியில் சிக்கி தவிக்கும் உயிரை காப்பாற்ற நொடிகள் கூட தேவை இல்லை
ஆனால் இறைவனின் தீர்மானம் சிறுவனின் வாழ்நாளுக்கு முடிவுரை எழுதுவதும் அதன் மூலம் பல படிப்பினைகளை மனித சமூகம் படிக்க வேண்டும் என்பது தான் என்பதை உணர்ந்து இதன் மூலம் அரசாங்கமும் பொதுமக்களும் பெற்றோர்களும் பெற வேண்டிய பாடத்தை படிப்பது தான் சிறுவன் சுர்ஜித் மரணம் நமக்கு கற்று தரும் இறுதியான பாடம்
சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு
அவனின் மீட்சிக்கு பிராத்தணை செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு
சிறுவனை மீட்க பல கட்ட முயற்சிகளை செலவுகளை செய்த நம் தமிழக அரசாங்கத்திற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ
நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
(அல்குர்ஆன் : 4:78)
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை
(அல்குர்ஆன் : 6:61)
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 62:8)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment