உடல் மண்ணுக்கு உயிர் இறைவனுக்கு

          உடல் மண்ணுக்கு
       உயிர் இறைவனுக்கு

             ****************

வாழ்வில் சிலரது மரணம் செய்தியாகவும்

சிலரது மரணம்  அதிர்ச்சியாகவும்

சிலரது மரணம் ரணமாகவும்

சிலரது மரணம் இழப்பாகவும்

சிலரது மரணம் பேரிழப்பாகவும்
அமைந்து விடும்

இதில் எந்த மரணமும் நாளை நம்மையும் தழுவியே தீரும் என்பது தான் மரணம் நமக்கு கற்று தரும் பாடம்

நம்மை விட்டு கடக்கும் ஒவ்வொரு நிமிடமும்
நம் வாழ்நாளை குறைக்கிறது என்பது தான் நிஜம்

கடந்த நிமிடங்களை நினைத்து வருந்துவதை விட
கடக்கவிருக்கும் நிமிடங்களை நினைத்து வாழ்வில் திருந்துவதும் கடந்த காலங்களில் செய்து விட்ட தவறுகளை நினைத்து வருந்துவதும்  தான் மனிதனின் சிறப்பு தன்மை

மண்ணில் இருந்து வளர்ந்த உடலை இறுதியில் மண்ணுக்கே சொந்தமாக்கும் நாம்

அந்த உடல் செயல்பட மூலமாக அமைந்த உயிரை கொடுத்த இறைவனிடமே நம் உயிர் சென்று விடும் என்பதை மறவ வேண்டாம்

قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ 

(நபியே!) நீர் கூறுவீராக மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்
வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை
அவனே உயிர்ப்பிக்கின்றான் அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான்
ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார்
அவரையே பின்பற்றுங்கள் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்

        (அல்குர்ஆன் : 7:158)

       நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்