காலை சிந்தனை
காலை கதிரவன் உதிக்கும் முன்
எண்ணத்தில் உதித்த வரிகள்
*******
13-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
தன்னிடம் இல்லாதவைகளை இழப்பாகவும்
இயலாததை எதிர்பார்ப்பாகவும் கருதும் மனம் ஒரு போதும் வாழ்வில் நிறைவை பெற முடியாது
இருக்கும் பணத்தை எண்ணி பார்த்தால் அது ஆசை
தன்னிடம் இல்லாத பணத்தை இருக்கும் பணத்தோடு இணைத்து எண்ணி பார்த்தால் அது பேராசை அல்ல மாறாக பேய் ஆசை
தன்னை மறந்து விடுவார்களோ என்று எண்ணி பிறர் மறக்காமல் இருக்க இனி எதை செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட
இது வரை செய்த காரியம் பிறர் நினைவில் இருக்கும் விதம் செய்தோமா என்று நினைத்து பார்த்தாலே இனி செய்யப்போகும் காரியத்தை பிறர் நினைப்பது போல் செய்ய முயற்சி செய்வோம்
மரணத்தை நோக்கியே மனிதனின் பயணம் என்று முடிவு செய்து விட்டால் பயணத்தின் சறுகல்கள் எளிதாக தோன்றும்
மரணம் வந்து விடுமோ என்றே எண்ணி கொண்டிருந்தால் மரணம் வரை அதை தவிர வேறு எதையும் கடக்க நாம் யோசிக்கமாட்டோம்
فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா?
(அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்
நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 10:102)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment