Posts

Showing posts from August, 2020

அறிவு தீனி

      காலை சிந்தனை பாகம் நான்கு              உறுப்பு தீனி அறிவு தீனி                    ============                       31-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              ===============       மனித வாழ்வில் அவனது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ஊட்ட சத்துக்களை மனிதன் தவறாது செலுத்தி கொண்டுள்ளான் காலை எழுந்ததும் அவனது நாவுக்கு ருசிக்கும் தேனீர் வயிற்றை  நிறைக்கும் உணவு கண்ணுக்கு இதமளிக்கும் காட்சி செவிக்கு பிடிக்கும் ஓசை கால்கள் விரும்பும் இடங்கள் கைகள் நாடும் பிடிகள் இப்படி ஒவ்வொரு உறுப்புகளின் நிலை அறிந்து அதை நிறைவேற்றும் மனிதன் அவனது அறிவை பக்குவப்படுத்தும் சொற்கள் எழுத்துக்கள் எவைகளையும் திருப்தியாக வழங்குவது இல்லை சமூக ஊடகம் கேளிக்கைகள்  வந்த பின்பு இந்த ஆர்வம் இன்னும் மங்கிப்போயுள்ளது அறிவை பயன்படுத்தும் பேச்சுக்கள் எழுத்துக்கள் காணொளிகளுக்கு தரும் வரவேற்பை விட அறிவை மங்க செய்யும் காட்சிகள் அரட்டைகள் விளையாட்டுகள் போன்றவைகளே சமூகவலைதளங்களில் அதிகமாக ரசிக்கப்படுகிறது ஜும்மா நாளில் நிகழ்த்தப்படும்  உரைகள் கூட முஸ்லிம் சமுதாய

மனிதனா மிருகமா

    காலை சிந்தனை பாகம் மூன்று               மனிதனா மிருகமா                    ============                       27-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              =============== மனிதனின் கரங்களால் செதுக்கப்பட்ட சிலைகளும் மனிதனின் சிந்தனையால் உருவகம் கொடுக்கப்பட்ட பொருள்களுமே  மனிதன் உட்பட எதையும் படைத்தது என்று நீ நம்புவதே பகுத்தறிவு என்றால் உன்னை விட பிற ஜீவன்களே பகுத்தறிவின் வாரிசுகளாகும் காரணம் மனிதனல்லாத ஜீவன்கள் கடவுளை வணங்குகிறதோ இல்லையோ படைப்புகள் எதையும் அவைகள் வணங்குவதும் இல்லை அவைகளுக்கு  அடி பணிவதும்  இல்லை கற்களை கல்லாகவும் புற்களை உணவாக மட்டுமே அவைகள் தனது ஐந்தறிவின் மூலமே சரியாக  புரிந்துள்ளது அதனால் தான் என்னவோ மனிதனிடம் இருக்க வேண்டிய சில நற்குணங்களும் கூட கால்நடை மற்றும் மிருகங்களிடம் ஒரு சில நேரங்களில்  தென்படுகிறது இதில் வேதனை மிருகங்களை திட்டும் போது கூட மனிதனே மனிதனை ஒப்பிட்டு பேசுவது இல்லை ஆனால் பிற மனிதனை ஏசும் போது மாத்திரம்  கால்நடைகளை உவமை படுத்தியே மனிதன் பேசுகிறான் اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ ا

மனக்குப்பை

   காலை சிந்தனை பாகம் இரண்டு                   மனக்குப்பை                    ============                       26-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              =============== தெருவில் நீக்கப்படாத குப்பை சுற்றாருக்கு சுகாதார கேடுகளை விளைவிப்பது போல் ஒரு மனிதனின் மனக்குப்பை அவனை சார்ந்துள்ள குடும்பத்திற்கும்  சுற்றியிருப்போருக்கும் நண்பர்களுக்கும் கேடுகளையே  விளைவிக்கும் அன்றாடம் வீடுகளில் சேரும் குப்பைகளை கழிவு தொட்டிகளில் தவறாமல் தூக்கி எறியும் மனிதன் தனது மனம் எனும் கிடங்கில் தேங்கியுள்ள விரோத குப்பை துரோக குப்பை ஒழுங்கீன குப்பை பொறாமை குப்பை சூழ்ச்சி குப்பை பகைமை குப்பை அறிவீன கொள்கை குப்பை ஆகியவைகளை தூக்கி வீசுவதற்கு தயாராக இல்லை குப்பைகளின் கிடங்குகளாக மனதை மாற்றி வைத்து கொண்டு உடையிலும் நடையிலும் மாத்திரம் மேக்கப்புகளை வெளிப்படுத்தி திரிவது வேடதாரிகளின் இலக்கணம் عَنْ أَنَسٍ ؓ أَنَّ امْرَأَةً كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ فَتُوُفِّيَتْ فَلَمْ يُؤْذَنِ النَّبِيُّ ﷺ بِدَفْنِهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِذَا مَاتَ

மதிப்பில்லா மனித சமூகம்

       மதிப்பில்லா மனித சமூகம்                  ============                       25-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              =============== உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டுபவனாக இரு அல்லது பிறர் திறமையை கண்டு உன்னை நீ செதுக்குபவனாக இரு கண் விழிப்பதும் உறங்குவதும் உண்ணுவதும் நேரத்தை வீணாக கழிப்பதும் தான் மனிதனின் இயல்பு என்று நீ நினைத்தால் நீ கால்நடைகளை விட கீழானவனே காரணம் கால்நடைகள் கூட பூமிக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழும் ஜீவன்களுக்கும் அவைகளை அறியாமலேயே பல நன்மைகளை அன்றாடம்  செய்து கொண்டே உள்ளது கால்நடைகளின் சானம் கூட விலைக்கு வாங்கப்படுகிறது ஆனால் நீ அதிகாலை கழிக்கும் கழிவுகளை உன்னை உயிராய் நேசிக்கும் எவரும் கண்ணால் பார்ப்பதை கூட அருவெருப்பாய்  காணுவார்கள் وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ ‌  لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا  وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا  وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا  اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌  اُولٰۤٮِٕكَ ه

உயிர்

                   உயிரே உயிரே                           *******                      18-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 134 5            ==================== மனிதன் வாழ்நாள் முழுவதும் செயல்படுவதற்கு அடிப்படையாக திகழும் உயிர் என்ற பொக்கிசத்தை ஒரு வினாடியிலும் குறைவான நேரத்தில் கைப்பற்றும் சர்வ வல்லமை கொண்டவனே இறைவன் எதிலும் தர்க்கத்தை செய்து ஏற்று கொள்ளும்  மனிதன் அல்லது மறுக்கும் மனிதன்  தர்க்கமே செய்யாமல் ஒன்றிணைந்து ஒப்புக்கொண்ட ஒரே விடயம் மரணம் வெல்லும் மனிதன் எவனும் இல்லை என்பது  மட்டுமே இறைவனின் நெருக்கம் பெற்ற இறைதூதர்களுக்கே மரணத்தில் இருந்து விதிவிலக்கு கொடுக்காத இறைவனின் பார்வையில் நம்மின் உயிர் மிகவும் துச்சமானதே அர்ப்பமானதே வாழ்ந்து சலித்தோர் பலர் இன்னும் மரணத்தை தழுவாது இருப்பதும் வாழ வேண்டிய பலர் நம்மை விட்டு திடீரென்று மறைவதும் இறைவனின் தீர்மானம் தான் மறுமையை நம்பாத மனிதனுக்கு  அவரது மரணமே முற்றுப்புள்ளி மறுமையை நம்பிய மனிதனுக்கு அவனது மரணமே நிரந்தர வாழ்வின் துவக்க புள்ளி              உயிர் 

அவசியமற்ற ஆராய்ச்சி

      அவசியமற்ற ஆராய்சிகளும்            அறிவீன பத்வாக்களும்                            *******                      16-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1344            ==================== முஸ்லிமாக உள்ள ஒரு மனிதன் அவன் செய்யும் அல்லது அங்கீகரிக்கும் காரியத்திற்க்கு மார்க்க சாயம் பூசினால்  அல்லது மறுமையில் நன்மை கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அந்நேரம் அது மார்க்கத்தில் கூடுமா கூடாதா என்று விவாதிப்பதில் விளக்குவதில் பொருத்தம் உள்ளது அக்காரியத்தை செய்யும் மனிதனே அதற்க்கு மார்க்க சாயம் பூசாத போது அவன் செய்யும் காரியத்தை மார்க்கத்தோடு இணைத்து ஹலால் ஹராம் பற்றி தர்கிக்கும் பழக்கம் சமூகவலைதளத்தில் சில முஸ்லிம்களிடம் ஈமான் எனும் பெயரில் காணப்படுகிறது இது தேவையற்ற விவாதமாகும் சுதந்திர தின நிகழ்வில் ( மார்க்கம் கண்டித்த காரியங்களை தவிர்த்து இதர நிகழ்வுகளில்)  பங்கு கொள்ளும் முஸ்லிமாக இருந்தாலும் சரி அவைகளில் கலந்து கொள்வதை மார்க்கம் என்று கூறுவது இல்லை அவ்வாறு இருக்க அது போன்ற நபர்களை ஈமானுக்கு எதிரான நடத்தையுடையவர்

பூமி

       எதையும் தாங்கும் இதயமே                             பூமி                            *******                      16-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                     ************** மனிதருள் மாணிக்கங்களை நல்லோர்களை தியாகிகளை சிந்தனைவாதிகளை புரட்சியாளர்களை நெறியாளர்களை அறிவாளிகளை இறைதூதர்களை விஞ்ஞானிகளை சர்வாதிகாரிகளை தொடர்ந்து  இழந்தாலும் அவர்களின் இழப்புக்காக வருந்தியதும் கலங்கியதும் இல்லை ஆணவத்தால் தாறுமாறாக சூழல்வதும் இல்லை தனது எந்த செயல்பாட்டையும் ஒரு விநாடி கூட அவர்களின் இழப்புக்காக தற்காலிகமாக நிறுத்தியதும் இல்லை எதையும் தாங்கும் இதயம் என்பதை விட எதையும் தாங்கும் பூமி என்பது தான் நூறுசதவிகிதம் உண்மை இறைகட்டளை எதுவோ அதை மாத்திரமே செயல்படுத்தும் பூமியின் தன்மையே இறைவனின் ஆற்றலை ஒவ்வொரு விநாடியும் வெளிப்படுத்தி வருகிறது இந்த இடம் எனக்கும் சொந்தம் இந்த இடம்  அவனுக்கு சொந்தம் என்பதை பொய்யாக்கி எந்த உயிரும் தனக்கே சொந்தம் என்பதை ஒவ்வோரு இழப்பின் போதும் நிரூபித்து வரும் பூமியே சத்தியத்தை அன்றாடம்  சொல்கிறது بَدِيْعُ السَّمٰوٰتِ

காலை சிந்தனை

   காலை கதிரவன் உதிக்கும் முன்       எண்ணத்தில் உதித்த வரிகள்                            *******                      13-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem தன்னிடம் இல்லாதவைகளை இழப்பாகவும் இயலாததை எதிர்பார்ப்பாகவும் கருதும் மனம்  ஒரு போதும் வாழ்வில்  நிறைவை பெற முடியாது இருக்கும் பணத்தை எண்ணி பார்த்தால் அது ஆசை தன்னிடம் இல்லாத பணத்தை இருக்கும் பணத்தோடு இணைத்து எண்ணி பார்த்தால் அது பேராசை அல்ல மாறாக பேய் ஆசை தன்னை மறந்து விடுவார்களோ என்று எண்ணி பிறர் மறக்காமல் இருக்க இனி  எதை செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட இது வரை செய்த காரியம் பிறர் நினைவில் இருக்கும் விதம் செய்தோமா என்று நினைத்து பார்த்தாலே இனி செய்யப்போகும் காரியத்தை பிறர் நினைப்பது போல் செய்ய முயற்சி செய்வோம் மரணத்தை நோக்கியே மனிதனின் பயணம் என்று முடிவு செய்து விட்டால் பயணத்தின் சறுகல்கள் எளிதாக தோன்றும் மரணம் வந்து விடுமோ என்றே எண்ணி கொண்டிருந்தால் மரணம் வரை அதை தவிர வேறு எதையும் கடக்க நாம் யோசிக்கமாட்டோம் فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْل

பாபர் மஸ்ஜித் பாகம் ஒன்று

            பாபர் மஸ்ஜித் தரும்         படிப்பினை பாகம் ஒன்று                           *******                      10-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1344            ==================== பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பது போல் பல வருடம் பாவனை செய்த அரசியல்வாதிகள் நடுநிலை வேடதாரிகள் பாபர் மன்னன் ராமருக்கு கட்டிய கோயிலை இடித்து விட்டு தான் பள்ளிவாசலை கட்டினார் என்ற சங்பரிவார  வாதத்திற்க்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்று  தீர்ப்பை வழங்கிய (2019 )  போதும் அதற்க்கு ஏற்ற நிலையில் பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்கள் வசம் ஏன் ஒப்படைக்கவில்லை என்று நீதிமன்றத்தை நோக்கி  எதிர் கேள்வியும் கேட்கவில்லை கொரோனா காலத்தில் மக்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகளை போட்டு விட்டு அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிய நிலையில் அதுவும் மதசார்பற்ற இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டது எப்படி  நியாயமாகும் என்றும் கண்டனத்தை பதிவும் செய்யவில்லை மாறாக சங்கிகளுக்கு கூஜா தூக

பாபர் மஸ்ஜித் கமிட்டி

      நீதியே இஸ்லாமிய வரலாறு          பாபர் மஸ்ஜித் கமிட்டியே                     உணருவீர்                            *******                      08-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1343            ==================== அரசிடம் முஸ்லிம் சமூகம் பாபர் பெயரில் பள்ளி கட்ட இடத்தை தானமாக தாருங்கள் என்று பிச்சை  கேட்டு இதுவரை போராடவில்லை பல ஆயிரம் உயிர்களை அதற்காக நாம்  இழக்கவில்லை பல கோடி உடமைகளை அதை காரணம் காட்டியே அநியாயமாக நாமே  பறி கொடுக்கவில்லை பல வருடம் அதற்காக  சிறைகளை நிரப்பவில்லை சங்கிகளின் அவதூறு அவமானப்பெயரை அதற்காக சுமக்கவில்லை ஒருவருக்கு ஒரு ரூபாய் அன்பளிப்பு செய்தாலும் கூட இந்திய முஸ்லிம்கள் அனைவரும்  28 கோடிபேர் ஒன்று சேர்ந்து ரூபாய் 28 கோடியில் அபகரித்து கட்டப்படும் ராமர் கோவிலை விட பல மடங்கு  பிரமாண்டமாக  அயோத்தியில் பாபர் பெயரில்  பள்ளிவாசலை ஒரே மாதத்தில் கட்டி முடிக்க  இயலும் நீதிமன்றம் அநியாயமாக தீர்ப்பு வழங்கி முஸ்லிம் சமுதாயத்தின் காதில் பூவை சுற்றுவதற்கு பிச்சை போட்ட இடத்தில் இந்தியாவின் வளர