பாபர் மஸ்ஜித் பாகம் ஒன்று
பாபர் மஸ்ஜித் தரும்
படிப்பினை பாகம் ஒன்று
*******
10-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1344
====================
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பது போல் பல வருடம் பாவனை செய்த அரசியல்வாதிகள் நடுநிலை வேடதாரிகள்
பாபர் மன்னன் ராமருக்கு கட்டிய கோயிலை இடித்து விட்டு தான் பள்ளிவாசலை கட்டினார் என்ற சங்பரிவார வாதத்திற்க்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பை வழங்கிய (2019) போதும் அதற்க்கு ஏற்ற நிலையில் பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்கள் வசம் ஏன் ஒப்படைக்கவில்லை என்று நீதிமன்றத்தை நோக்கி எதிர் கேள்வியும் கேட்கவில்லை
கொரோனா காலத்தில் மக்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகளை போட்டு விட்டு அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிய நிலையில்
அதுவும் மதசார்பற்ற இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டது எப்படி நியாயமாகும் என்றும் கண்டனத்தை பதிவும் செய்யவில்லை
மாறாக சங்கிகளுக்கு கூஜா தூக்கும் விதமாக தான் நீதிக்கு புகழ் பாடல் பாடுவது போல் அறிக்கைகளையும் தந்து தங்களது பச்சோந்திதனத்தை வெளிப்படுத்தி விட்டார்கள்
இதில் விதிவிலக்கு பெற்ற அரசியல்வாதிகள் மிகவும் அரிது
இவர்களை தான் முஸ்லிம் சமூகத்திற்க்கு காவலர்கள் என்றும் நடுநிலைவாதிகள் என்றும் முஸ்லிம் சமுதாயம் வழமை போல் நம்பி ஏமாந்துள்ளது
இனியும் கட்சி போதையில் இந்த கயவர்களுக்கு ஆதரவாக அறிக்கை போடும் சில முஸ்லிம்கள் திருந்தாவிட்டால் அவர்களை விட முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகிகள் வேறு எவரும் இருக்க முடியாது
பாபர் மஸ்ஜித் உணர்த்திய படிப்பினைகளில் இதுவே முக்கியமான படிப்பினை
لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِىْ بَنَوْا رِيْبَةً فِىْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும்
அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை)
அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானமிக்கவன்
(அல்குர்ஆன் : 9:110)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment