அறிவு தீனி

      காலை சிந்தனை பாகம் நான்கு
             உறுப்பு தீனி அறிவு தீனி

                   ============
                      31-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
             ===============      

மனித வாழ்வில் அவனது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ஊட்ட சத்துக்களை மனிதன் தவறாது செலுத்தி கொண்டுள்ளான்

காலை எழுந்ததும் அவனது நாவுக்கு ருசிக்கும் தேனீர்
வயிற்றை  நிறைக்கும் உணவு
கண்ணுக்கு இதமளிக்கும் காட்சி
செவிக்கு பிடிக்கும் ஓசை
கால்கள் விரும்பும் இடங்கள்
கைகள் நாடும் பிடிகள்

இப்படி ஒவ்வொரு உறுப்புகளின் நிலை அறிந்து அதை நிறைவேற்றும் மனிதன்

அவனது அறிவை பக்குவப்படுத்தும் சொற்கள் எழுத்துக்கள் எவைகளையும் திருப்தியாக வழங்குவது இல்லை

சமூக ஊடகம் கேளிக்கைகள்  வந்த பின்பு இந்த ஆர்வம் இன்னும் மங்கிப்போயுள்ளது

அறிவை பயன்படுத்தும் பேச்சுக்கள் எழுத்துக்கள் காணொளிகளுக்கு தரும் வரவேற்பை விட
அறிவை மங்க செய்யும் காட்சிகள் அரட்டைகள் விளையாட்டுகள் போன்றவைகளே சமூகவலைதளங்களில் அதிகமாக ரசிக்கப்படுகிறது

ஜும்மா நாளில் நிகழ்த்தப்படும்  உரைகள் கூட முஸ்லிம் சமுதாயத்தின் செவிகளை சென்றடைவது இல்லை காரணம் அந்தளவு ஈமான்தாரிகளின் அறிவும் மழுங்கி போயுள்ளது

இதனால் தான் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே மறுமை நாளில் சுவனம் செல்லும் நிலை இருப்பதாக நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களும் சொல்லி சென்றுள்ளனர்

மனித உறுப்புகளை பொறுத்தவரை அவைகளுக்கான தீனி ஒரு எல்லைக்குள் முடிந்து விடும்

அறிவுக்கான தீனியை பொறுத்தவரை அதற்கு எல்லை என்பது இல்லை

எந்த ஒன்றுக்கு எல்லை இல்லையோ அந்த அறிவை  பட்டினி போட்டு எவைகளுக்கு எல்லை உள்ளதோ அவைகளை அளவுக்கு மீறிய தீனி போட்டு மறுமை நாளை வீணாக்கும் சமூகமாக மாறி விட வேண்டும்

இந்த பதிவை கூட முழுமையாக  பார்வையிடும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــا‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ‏ 
இன்னும் உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான் பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான் கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு
நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்

          (அல்குர்ஆன் : 16:70)

            நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்