மனிதனா மிருகமா
காலை சிந்தனை பாகம் மூன்று
மனிதனா மிருகமா
============
27-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
===============
மனிதனின் கரங்களால் செதுக்கப்பட்ட சிலைகளும் மனிதனின் சிந்தனையால் உருவகம் கொடுக்கப்பட்ட பொருள்களுமே மனிதன் உட்பட எதையும் படைத்தது என்று நீ நம்புவதே பகுத்தறிவு என்றால்
உன்னை விட பிற ஜீவன்களே பகுத்தறிவின் வாரிசுகளாகும்
காரணம் மனிதனல்லாத ஜீவன்கள் கடவுளை வணங்குகிறதோ இல்லையோ படைப்புகள் எதையும் அவைகள் வணங்குவதும் இல்லை அவைகளுக்கு அடி பணிவதும் இல்லை
கற்களை கல்லாகவும்
புற்களை உணவாக மட்டுமே அவைகள் தனது ஐந்தறிவின் மூலமே சரியாக புரிந்துள்ளது
அதனால் தான் என்னவோ மனிதனிடம் இருக்க வேண்டிய சில நற்குணங்களும் கூட
கால்நடை மற்றும் மிருகங்களிடம் ஒரு சில நேரங்களில் தென்படுகிறது
இதில் வேதனை மிருகங்களை திட்டும் போது கூட மனிதனே மனிதனை ஒப்பிட்டு பேசுவது இல்லை
ஆனால் பிற மனிதனை ஏசும் போது மாத்திரம் கால்நடைகளை உவமை படுத்தியே மனிதன் பேசுகிறான்
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்
(அல்குர்ஆன் : 8:22)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment