மதிப்பில்லா மனித சமூகம்

       மதிப்பில்லா மனித சமூகம்

                 ============
                      25-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
             ===============
உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டுபவனாக இரு

அல்லது பிறர் திறமையை கண்டு உன்னை நீ செதுக்குபவனாக இரு

கண் விழிப்பதும் உறங்குவதும் உண்ணுவதும் நேரத்தை வீணாக கழிப்பதும் தான் மனிதனின் இயல்பு என்று நீ நினைத்தால்

நீ கால்நடைகளை விட கீழானவனே

காரணம் கால்நடைகள் கூட
பூமிக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழும் ஜீவன்களுக்கும் அவைகளை அறியாமலேயே பல நன்மைகளை அன்றாடம்  செய்து கொண்டே உள்ளது

கால்நடைகளின் சானம் கூட விலைக்கு வாங்கப்படுகிறது

ஆனால் நீ அதிகாலை கழிக்கும் கழிவுகளை உன்னை உயிராய் நேசிக்கும் எவரும் கண்ணால் பார்ப்பதை கூட அருவெருப்பாய்  காணுவார்கள்

وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ ‌  لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا  وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا  وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا  اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ‌  اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ‏

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம் அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்
அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால்,அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை

அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள்

இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்
இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்
இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்

          (அல்குர்ஆன் : 7:179)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்