பாபர் மஸ்ஜித் கமிட்டி

      நீதியே இஸ்லாமிய வரலாறு
         பாபர் மஸ்ஜித் கமிட்டியே
                    உணருவீர்

                           *******
                     08-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1343
           ====================
அரசிடம் முஸ்லிம் சமூகம் பாபர் பெயரில் பள்ளி கட்ட இடத்தை தானமாக தாருங்கள் என்று பிச்சை  கேட்டு இதுவரை போராடவில்லை

பல ஆயிரம் உயிர்களை அதற்காக நாம்  இழக்கவில்லை

பல கோடி உடமைகளை அதை காரணம் காட்டியே அநியாயமாக நாமே  பறி கொடுக்கவில்லை

பல வருடம் அதற்காக  சிறைகளை நிரப்பவில்லை

சங்கிகளின் அவதூறு அவமானப்பெயரை அதற்காக சுமக்கவில்லை

ஒருவருக்கு ஒரு ரூபாய் அன்பளிப்பு செய்தாலும் கூட இந்திய முஸ்லிம்கள் அனைவரும்  28 கோடிபேர் ஒன்று சேர்ந்து ரூபாய் 28 கோடியில் அபகரித்து கட்டப்படும் ராமர் கோவிலை விட பல மடங்கு  பிரமாண்டமாக  அயோத்தியில் பாபர் பெயரில்  பள்ளிவாசலை ஒரே மாதத்தில் கட்டி முடிக்க  இயலும்

நீதிமன்றம் அநியாயமாக தீர்ப்பு வழங்கி முஸ்லிம் சமுதாயத்தின் காதில் பூவை சுற்றுவதற்கு பிச்சை போட்ட இடத்தில் இந்தியாவின் வளர்சிக்கு பாடுபட்ட மன்னன் பாபர் பெயரில் மருத்துவமனை கட்ட வேண்டும் பள்ளிகூடம் கட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை

அவ்வாறு கட்டினாலும் பாபர் என்ற பெயர் தான் அதன் முகப்பில் காட்சி தருமே தவிர
அதன் ஆளுமை யாவும் காவிகள் கைப்பிடியிலும் காவிகளுக்கு கூஜா தூக்கும் முஸ்லிம் வேடதாரிகளின்  வம்சத்துக்கும் தான் அது வருங்காலத்தில்  பயன் தரும்

கட்டிய மனைவியை கடத்தி சென்று கொடூரமானவனுக்கு பலியாக்கிவிட்டு உன்  மனைவிக்கு  பகரமாக தெருவில் திரியும் ஏதோ ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வதை போல் தான் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இருக்கிறது

உரிமைக்கு போராடுபவனும் சத்தியத்திற்கு தியாகம் செய்பவனும் தான் முஸ்லிமாக இருக்க முடியுமே தவிர

தனது இயலாமையின் காரணமாக அல்லது கோழைத்தனத்தின் காரணமாக நாம் இதற்கு பணிந்து செல்வோம் என்று பிதட்டல் வார்த்தைகளில் நல்லிணக்கம் பேசுவது முஸ்லிம்களின் தன்மை அல்ல

பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் இருந்து அபகரித்து காவிகள் ராமருக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள் என்ற அவப்பெயர் எப்படி இனி உலகம் உள்ளவரை அழியாதோ

அதே போல் முஸ்லிம்களாகிய எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதம் என்பதாலும் நீதிமன்றத்தால்  கொடுக்கப்பட்ட இடத்தை கேட்டு நாம் போராடவில்லை என்பதாலும் உத்தமர்களாக வேடம் போடும் நீதிமன்றத்திடமே அந்த இடத்தை திருப்பி கொடுத்தார்கள் என்ற நல்ல பெயரை பாபர் மஸ்ஜித் கமிட்டி உருவாக்கட்டும்

காரணம் பாபர் மஸ்ஜித் பள்ளியின் நிர்வாகத்திற்காக பல வருடம் கொடுமைகளை அனுபவித்து இறைவனின் திருப்திக்காக மாத்திரமே குரல் கொடுத்து தியாக செய்த கூட்டம் இந்திய முஸ்லிம்கள்

இதை பாபர் மஸ்ஜித் கமிட்டி உணருமா   ?

பாபர் பெயரில் பள்ளிவாசல் தான் வேண்டும் என்றால் அல்லது பாபர் பெயரில் மருத்துவமனை தான் கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு அறிக்கையை மாத்திரம் பாபர் மஸ்ஜித் கமிட்டி முறையீடாக முஸ்லிம்களிடம் வெளியிடட்டும்

பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்க இந்திய முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த உலகமே கை கொடுக்கும்

பொருத்திருந்து பார்ப்போம்
பாபர் மஸ்ஜித் கூட்டறிக்கையை

இன்ஷா அல்லாஹ்

وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰٓى اٰمَنَّا بِهٖ‌  فَمَنْ يُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۙ‏ 

இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்
எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ அவன் இழப்பைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்

           (அல்குர்ஆன் : 72:13)

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்