அவசியமற்ற ஆராய்ச்சி
அவசியமற்ற ஆராய்சிகளும்
அறிவீன பத்வாக்களும்
*******
16-08-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1344
====================
முஸ்லிமாக உள்ள ஒரு மனிதன் அவன் செய்யும் அல்லது அங்கீகரிக்கும் காரியத்திற்க்கு மார்க்க சாயம் பூசினால் அல்லது மறுமையில் நன்மை கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அந்நேரம் அது மார்க்கத்தில் கூடுமா கூடாதா என்று விவாதிப்பதில் விளக்குவதில் பொருத்தம் உள்ளது
அக்காரியத்தை செய்யும் மனிதனே அதற்க்கு மார்க்க சாயம் பூசாத போது அவன் செய்யும் காரியத்தை மார்க்கத்தோடு இணைத்து ஹலால் ஹராம் பற்றி தர்கிக்கும் பழக்கம் சமூகவலைதளத்தில் சில முஸ்லிம்களிடம் ஈமான் எனும் பெயரில் காணப்படுகிறது
இது தேவையற்ற விவாதமாகும்
சுதந்திர தின நிகழ்வில் ( மார்க்கம் கண்டித்த காரியங்களை தவிர்த்து இதர நிகழ்வுகளில்) பங்கு கொள்ளும் முஸ்லிமாக இருந்தாலும் சரி அவைகளில் கலந்து கொள்வதை மார்க்கம் என்று கூறுவது இல்லை
அவ்வாறு இருக்க அது போன்ற நபர்களை ஈமானுக்கு எதிரான நடத்தையுடையவர்களாக சித்தரிப்பது மார்க்க அறிவீனமாகும்
இஸ்லாத்தில் ஹிஜ்ரத் என்ற வருட பிறப்பை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நேரடியாக கற்று தராவிட்டாலும் அந்த ஹிஜ்ரத் வரவாற்றை வருடம் தோறும் அந்நாளில் நினைவுபடுத்துவதை இவர்கள் குற்றமாக பார்ப்பது இல்லை
காரணம் அது வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் தான்
அதே போல் இந்திய சுதந்திரத்திற்கு தியாகம் செய்த முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்து கூறுவதோ நினைவு கூறுவதோ எவ்விதத்திலும் தவறான காரியமும் இல்லை
மார்க்கத்தை எத்தி வைக்கிறோம் எனும் பெயரில் தோணுவதை எல்லாம் மார்க்கமாக நினைத்து கொண்டு பிறர்களை குற்றவாளியாக சித்தரிக்கும் போக்கை இனியாவது கை கழுவ வேண்டும்
இவ்விசயத்தில் மாற்று கருத்துடைய நபர்கள் ஆதாரப்பூர்வமாக தங்கள் மறுப்பை தெரிவிக்கலாம் இன்ஷா அல்லாஹ்
قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ غَيْرَ الْحَـقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِيْلِ
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 5:77)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment