மனக்குப்பை

   காலை சிந்தனை பாகம் இரண்டு
                  மனக்குப்பை

                   ============
                      26-08-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
             ===============
தெருவில் நீக்கப்படாத குப்பை சுற்றாருக்கு சுகாதார கேடுகளை விளைவிப்பது போல்
ஒரு மனிதனின் மனக்குப்பை அவனை சார்ந்துள்ள குடும்பத்திற்கும்  சுற்றியிருப்போருக்கும் நண்பர்களுக்கும் கேடுகளையே  விளைவிக்கும்

அன்றாடம் வீடுகளில் சேரும் குப்பைகளை கழிவு தொட்டிகளில் தவறாமல் தூக்கி எறியும் மனிதன் தனது மனம் எனும் கிடங்கில் தேங்கியுள்ள

விரோத குப்பை
துரோக குப்பை
ஒழுங்கீன குப்பை
பொறாமை குப்பை
சூழ்ச்சி குப்பை
பகைமை குப்பை
அறிவீன கொள்கை குப்பை
ஆகியவைகளை தூக்கி வீசுவதற்கு தயாராக இல்லை

குப்பைகளின் கிடங்குகளாக மனதை மாற்றி வைத்து கொண்டு

உடையிலும் நடையிலும் மாத்திரம் மேக்கப்புகளை வெளிப்படுத்தி திரிவது வேடதாரிகளின் இலக்கணம்

عَنْ أَنَسٍ ؓ أَنَّ امْرَأَةً كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ فَتُوُفِّيَتْ فَلَمْ يُؤْذَنِ النَّبِيُّ ﷺ بِدَفْنِهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِذَا مَاتَ لَكُمْ مَيِّتٌ فَآذِنُونِي، وَصَلَّي عَلَيْهَا، وَقَالَ: إِنِّي رَأَيْتُهَا فِي الْجَنَّةِ لِمَا كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ

ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு பெண்மணி பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி வந்தார் அப்பெண்மணி இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்த விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அதன் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு ஜனாஸாத் தொழுகை தொழுதார்கள்

இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்துவந்ததால் இவர் சொர்க்கத்தில் இருந்ததை நான் கண்டேன் என்று கூறினார்கள்

             நூல்  தப்ரானி

اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ‌  وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا‏ 

யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்

மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்

         (அல்குர்ஆன் : 4:146)


             நட்புடன்  J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்