பண்பாடுகளே மனித இதயத்தில் குடியமர்த்தும்
கழிவுகளை இதயத்தில் சுமக்கும் மனிதர்கள் ♦♦♦♦♦♦♦♦♦ J . YASEEN IMTHADHI கட்டுரை எண் 1428 28-11-2021 ******* இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக கருதும் பலர் இறைவனின் தீர்மானத்தை ஜீரணிப்பது இல்லை அதன் வெளிப்படை தோற்றமே பொறாமை 1-தனக்கு கிடைக்காத ஒன்று 2-தன்னிடம் இருக்கும் ஒன்று 3-தனக்கு நிகரான ஒன்று 3-தன்னை விட கூடுதலான ஒன்று பிறரிடம் காணும் போது அதை ஜீரணிக்க முடியாததின் விளைவே பொறாமை இந்த எண்ணங்களின் பிம்பமே மனிதனிடம் வெளியாகும் விரோதம் துரோகம் அவதூறு புறம் கோள் அனைத்தும் ஆடைகளின் மீது அழுக்கு படிவதை வெறுக்கும் மனிதன் தனது இருப்பிடம் அசிங்கமாக இருப்பதை வெறுக்கும் மனிதன் தவறான எண்ணம் மூலம் ஏற்பட்டுள்ள தனது உள்ளத்தின் கழிவுகளை கசடுகளை நீக்க முற்படுவது இல்லை மனிதனின் உள்ளத்தின் ஆழத்தில் ஒட்டியுள்ள கழிவுகளின் காரணத்தை முழுமையாக இறைவன் அறிவான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் தனது உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கழிவுகளின் துர்நாற்றம் தான் தன்னை பிற மனிதனுக்கு கெட்டவனாக வெறுக்கத்தக்கவனாக அடையாளம் காட்