பேச்சும் எழுத்தும் கண்ணாடி
உன்னை வெளிப்படுத்தும்
கண்ணாடி
♦♦♦♦♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1428
27-11-2021
*******
மனதில் ஆயிரம் நல்ல கருத்துக்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் முறையில் இயம்பாவிட்டால் அதன் மூலம் எந்த பலனையும் அடைய முடியாது
கருத்துக்களை கடினமாக சொல்வது தப்பில்லை
அதை கொடூரமாக வெளிப்படுத்துவது தான் தவறு
கருத்துக்களை நளினமாக சொல்வது திறமை இல்லை
அதை எளிமையாக விளக்கி சொல்வது தான் திறமை
ஒரு மனிதன் தனது சொந்த வாழ்வில் பேணும் பண்பாடுகளை அவனது பேச்சும் எழுத்தும் அவனை அறியாமலேயே வெளிப்படுத்தி விடும்
அதனால் தான் உருவத்தில் மக்கள் மனதில் கண்ணியத்தை சுமந்தவர்கள் பொதுதளத்தில் தங்களை இழிவானவர்களாக அநாகரீகம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு விடுகின்றனர்
நம் எழுத்தும் பேச்சும் நம்மை வெளிப்படுத்தும் கண்ணாடி
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள்
அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்
(அல்குர்ஆன் : 20:44)
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர் (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால்
அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக
சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக
நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்
(அல்குர்ஆன் : 3:159)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment