மன உளைச்சல்
மன உளைச்சல்
***********
J .YASEEN IMTHADHI
********
மனிதன் சந்திக்கும் மன உளைச்சல்களில் தொண்ணூறு சதவிகிதம் தனது அறியாமையால் அவசரத்தால் ஆவேசத்தால் ஆதங்கத்தால் விரக்தியால் ஏற்படுத்தி கொள்ளும் நிகழ்வுகளே
சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டே சாத்தியமற்றவைகளை தேடி செல்லும் போது அதற்கான பரிசு மன உளைச்சல்
தன்னால் இயலாது என்று உணர்ந்த பின்பும் இயலாததை நோக்கி பயணிப்பதின் பரிசு மன உளைச்சல்
எது சரி எது தவறு என்று தீர்மானித்த பின்பும் அறிவை மீறிய செயல்பாடுகள் கொடுக்கும் தண்டனையே மன உளைச்சல்
எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி
என்று அலைபவன் அறிவீனன்
எதனால் நிம்மதி போனது என்பதை உணருபவனே அறிவாளி
لا يُلْدَغُ المؤمِنُ من جُحْرٍ مَرَّتيْنِ
الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر صحيح البخاري
الصفحة أو الرقم: 6133 | خلاصة حكم المحدث : [صحيح]
இறைநம்பிக்கையாளன் (விஷ) பொந்தில் இரு முறை கொட்டு பட மாட்டான்
(மாறாக ஒரு முறை கடிபட்டவுடன் விழிப்புணர்வு பெறுவான்)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment