சாத்தானின் சகோதரன்
சாத்தானின் சகோதரன்
***********
J .YASEEN IMTHADHI
********
பிறரை குறை கூறி திரிவதையே வாடிக்கையாக கொண்டவன்
அவனே அன்றாடம் குறை உடையவனாக திரிகின்றான் என்பதற்கு அவனது நாவும் எழுத்தும் சான்று
குறையாக நடப்பவனை கூட இறைவன் மன்னிப்பான்
ஆனால் குறை கூறுவதை திறமையாக கருதுபவனை இறைவன் மறுமையில் மன்னிப்பது இல்லை
இத்தகைய தன்மை கொண்டவன் கண்ணில் ஒரு போதும் பிறர் செய்யும் நல்லறரம் தென்படாது
காரணம் நல்லறத்தையும் சாத்தான் அவனது கண்ணில் தீமை போல் சித்தரித்து விடுகிறான்
பேசும் பேச்சுக்களும்
எழுதும் எழுத்துக்களும்
பரப்பும் செய்திகளும்
குற்றத்தில் சமம் என்பதை என்றும் மறவாதீர்
குறைகளை சீர் செய்பவன் வானவர்களின் நெருக்கத்தை பெறுகிறான்
குறைகளையே நேசிப்பவன் சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றி அவனது உடன் பிறந்த சகோதரனாகவே மாறி விடுகின்றான்
ரசிப்பவன் இருக்கும் வரை குறை கூறுபவன் திருந்தப் போவது இல்லை
அவனது செயலுக்கு வருந்தப் போவதும் இல்லை
وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்
(அல்குர்ஆன் : 104:1)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment