மழை வெள்ளம் மொழிகிறது

              மழை வெள்ளம்
                 மொழிகிறது

         ♦♦♦♦♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI
                      14-11-2021
                         *******

மனிதன் விரும்பும் நேரத்தில் மழை பொழிவது இல்லை

விரும்பும் அளவு மழை பொழிவது இல்லை

விரும்பும் விதத்தில் மழை பொழிவது இல்லை

அறிவிக்கும் முறையில் மழை பொழிவது இல்லை

மனிதன் மழை பொழியா விடில் வானை பார்ப்பான்
மழை நீர்  பொழிந்து  கொண்டிருந்தால்  பூமியை பார்ப்பான்

அருவிகளும் ஆறுகளும் மனிதனின் கட்டளையை  கேட்டு இயங்குவது இல்லை
நதிகளும் மேகங்களும் மனிதனின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி செயலாற்றுவதும் இல்லை

மழை  மூலம் மனிதன் அழிவுகளை சந்தித்தால் அதற்காக பிரபஞ்சம்  கலங்குவதும் இல்லை

சில மணி நேரங்கள் தனது செயல்பாடுகளை நிறுத்தி வருந்துவதும் இல்லை

இயற்கை மேல் பழி போட்டு இயலாமையை மறைமுகமாக ஒப்பு கொண்டவனும் ( நாத்தீகனும்)

இறைவனே கதி என்று இறைவனிடம் கையேந்தி இறைஞ்சுபவனும் ( ஆத்தீகனும்)
இறைவனின் அடிமை என்பதை தான் மழை வெள்ளம் அழுத்தமாய்  பேசுகிறது

நீர் இன்றி அமையாது உலகு என்பது பழமொழி
அவன் நாட்டம் இன்றி எதுவும் செயல் படாது என்பதே இறைவன் கூறும் அமுத மொழி

وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ‌ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

அவன் தான்  தன்னுடைய அருள் (மாரிக்)கு முன் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பி வைக்கிறான்
அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம் பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம்  இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம்
(எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக

           (அல்குர்ஆன் : 7:57)

فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்

         (அல்குர்ஆன் : 7:133)

        நட்புடன் J . இம்தாதி







Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்