பண்பாடுகளே மனித இதயத்தில் குடியமர்த்தும்
கழிவுகளை இதயத்தில்
சுமக்கும் மனிதர்கள்
♦♦♦♦♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1428
28-11-2021
*******
இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக கருதும் பலர் இறைவனின் தீர்மானத்தை ஜீரணிப்பது இல்லை
அதன் வெளிப்படை தோற்றமே பொறாமை
1-தனக்கு கிடைக்காத ஒன்று
2-தன்னிடம் இருக்கும் ஒன்று
3-தனக்கு நிகரான ஒன்று
3-தன்னை விட கூடுதலான ஒன்று பிறரிடம் காணும் போது அதை ஜீரணிக்க முடியாததின் விளைவே பொறாமை
இந்த எண்ணங்களின் பிம்பமே மனிதனிடம் வெளியாகும் விரோதம் துரோகம் அவதூறு புறம் கோள் அனைத்தும்
ஆடைகளின் மீது அழுக்கு படிவதை வெறுக்கும் மனிதன் தனது இருப்பிடம் அசிங்கமாக இருப்பதை வெறுக்கும் மனிதன் தவறான எண்ணம் மூலம் ஏற்பட்டுள்ள தனது உள்ளத்தின் கழிவுகளை கசடுகளை நீக்க முற்படுவது இல்லை
மனிதனின் உள்ளத்தின் ஆழத்தில் ஒட்டியுள்ள கழிவுகளின் காரணத்தை முழுமையாக இறைவன் அறிவான் என்பதில் சந்தேகம் இல்லை
ஆனால் தனது உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கழிவுகளின் துர்நாற்றம் தான் தன்னை பிற மனிதனுக்கு கெட்டவனாக வெறுக்கத்தக்கவனாக அடையாளம் காட்டும் என்ற பகுத்தறிவும் கூட இல்லாதவனாக மனிதன் வாழ்கிறான்
அதனால் அவன் சமூகத்தில் சுமக்கும் அவப்பெயர்கள் தான்
1 நயவஞ்சகன்
2 பச்சை துரோகி
3 தீண்ட தகாதவன்
4 பொய்யன்
5 கூட்டி சொல்பவன்
தீய குணங்களால் தன்னை மாத்திரம் ஒரு மனிதன் நரகில் தள்ளுவது இல்லை
மாறாக அவனை சார்ந்த குடும்பத்தையும் வாரிசுகளையும் அவனது தவறான செய்கைகளின் பக்கம் விரும்பியும் நிர்பந்தத்திலும் நரகை நோக்கியே இழுக்கின்றான்
குடும்பங்களில் ஜென்ம பகை
ஜமாத்துகளில் தீரா பிரச்சனை
அனைத்தும் இது போல் கழிசடைகளால் ஏற்படுவது தான்
எதுவும் இறைவனின் நாட்டம் என்று உறுதியான நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது போன்றோர் செயல்களும் சூழ்ச்சிகளும் எவ்வித விரக்திகளையும் நிச்சயம் ஏற்படுத்தாது
சூரியனை பார்த்து நாய்கள் குரைப்பதால் சூரியன் தனது செயலை ஒரு வினாடியும் நிறுத்துவது இல்லை
நாய்களை பார்த்து சிங்கம் என்று அறிவீனர்கள் சொல்வதால் நாய்கள் சிங்கத்தின் அந்தஸ்தை அடைவதும் இல்லை
مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّـنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَآءِ ثُمَّ لْيَـقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ
அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே
இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்
(அல்குர்ஆன் : 22:15)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment