இழி குணம்

      இழிகுணத்தால் நரகை
          அடையும் அறிவீனன்

                     ***********
             J .YASEEN IMTHADHI
                        ********

பிறர் முன்னேற்றத்தின் மீதுள்ள பொறாமையே ஒரு மனிதனை பல தவறுகளை செய்ய தூண்டுகிறது ! 

குறைகளை ஆய்வு செய்வது 
குறைகளை பரப்புவது 
நிறைகளை மறைப்பது 
உள் ஒன்றும் புறம் ஒன்றும் வைத்து பேசுவது 
அவதூறுகளை ரசிப்பது
அதற்கு சுயமாக வடிவங்களை அமைப்பது
வணிகத்தை கெடுப்பது 
இப்படி ஏராளம் 





இதற்கு அவன் கூறும் காரணம் எதுவும் அவனை தனிப்பட்டு  பாதிக்கும் விசயங்களாகவும் இருக்காது 

இதில் ஐந்து நேர தொழுகையாளிகளும்  அடிமைபட்டிருப்பதில் தான் சாத்தானின் வல்லமையை  வெளிப்படையாக 
அறிய முடிகிறது 

தொழுகையாளிகளுக்கும் கேடு என்று இறைவன் திருமறையில் கூறியிருப்பதின் காரணத்தை பல வடிவங்களில்  சிந்திப்போரால் அறிந்து கொள்ள முடியும்

தொழுகையை நிறைவேற்றாது  நரகை அடைபவனும் 

தொழுகையை நிறைவேற்றி நன்மைகளை சேகரித்து அதை மனித உரிமைகளை பேணாது நாசமாக்கி கொள்பவனும் அறிவீனன்


தொழுகையை பேணாதவனை கூட இறைவன் நாடினால் மன்னிப்பான்

ஆனால் மனித உரிமைகளில் மோசமாக நடந்து கொள்பவனை இறைவன் மன்னிக்கவே  மாட்டான் என்பதை மறுமை நாளில் உணரும் போது அதனால் ஒரு பயனும் இல்லை 


فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்

            (அல்குர்ஆன் : 107:4)

         நட்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்