Posts

Showing posts from October, 2020

மீலாதும் மவ்லிதும்

          மீலாதும் மவ்லீதும்        வலுவிழப்பது யாரால் 31 :10:2020 கட்டுரை எண் 1384          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• பல்லாயிரக்கணக்கில் இறைவன் நபிமார்களை  சங்கிலி தொடராக அனுப்பி இருந்தும் அவர்களில் ஒருவருக்கும் மீலாது விழாவை எடுக்காது அவர்கள் பெயரால் மவ்லீது பாடல்களை பாடாது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் மீலாது விழாவை கொண்டாடுவதின்  காரணம் என்ன நபிமார்களுக்கு மத்தியில் கூட பிறப்பில் பாரபட்சமா  ? என்ற கேள்வியை எழுப்பினாலும் சரி சஹாபாக்கள் ஏன் மீலாது விழாவை கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினாலும் சரி மத்ஹபுகளில் கூட ஏன் மீலாது விழாவை பற்றி கருத்து சொல்லப்படவில்லை என்று கேள்வியை எழுப்பினாலும் சரி மீலாது விழாவுக்கு முட்டு கொடுக்கும் இமாம்களின் ஒரே பதில்  ஏன் நபிகளாரை புகழ கூடாதா   ? சஹாபாக்கள் நபிகளாரை புகழவில்லையா என்று மட்டுமே எதிர் கேள்வியை பாமரர்களிடம் எழுப்பி விட்டு பின்வாங்கி விடுவார்கள் சரி சஹாபாக்கள் நபிகளாரை எப்படி புகழ்ந்தார்களோ அது தா

சங்கிகளுக்கு சமர்ப்பணம்

    சங்கிகளுக்கு சமர்பிக்கும்           இஸ்லாமிய செய்தி 27 :10:2020 கட்டுரை எண் 1383          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• நாட்டில் எது போன்ற அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய லேபிளை குத்துவதும் இந்து மதத்தின் வர்ணாசிரம கொடுமையை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அதற்கு முஸ்லிம்களை தொடர்பு படுத்தி பேசுவதும் சங்கிகளின் ( காவிகளின் ) பரம்பரை வழக்கம் இந்து மதத்தின் தீண்டாமை  கொடுமைகளை அனுபவித்து அதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பும் மக்களும் இந்து மதம் சார்ந்தவர்கள் தான் கடவுளை ஏளனம் செய்து மதங்களை விட்டு வெளியேறி செல்லும் நாத்தீகர்களும் நம் நாட்டு சட்டப்படி இந்துக்கள் தான் இவர்களை கண்டிப்பதை தவிர்த்து விட்டு அல்லது இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாக பதில் சொல்லும் திறனை வளர்த்துவதை தவிர்த்து விட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சம்மந்தமே இல்லாது  வசைபாடுவது சங்கிகளுக்கு ( காவிகளுக்கு  ) கைவந்த கலை இந்து மதத்தை தனது வாழ்கை நெறியாக கொண்டு ராம பஜனை பா

சுபுஹான மவ்லூத்

        ஜமாஅத்துல் உலமா                மவ்லூத்களை மொழிபெயர்த்து வெளியிடுமா      25 :10:2020 கட்டுரை எண் 1382          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• அந்நிய பாஷையில் எழுதப்பட்ட  மவ்லூத் எனும்  அரபு கவிதை  பாடல்களை பற்றி  மறுப்புகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவும் சூழலில் மனித கற்பனையில் தோன்றிய அந்த புத்தகத்திற்கு மார்க்க போர்வையில் முட்டு கொடுப்பவர்கள் மவ்லூத் பாடல்கள் முழுவதையும் மக்கள் நேரடியாக  படித்து புரியும் விதம் தமிழ் மொழியில் வரிக்கு வரி மொழி பெயர்த்து கொடுத்தாலே மார்க்க உணர்வுள்ள மக்கள் மவ்லூத்களை இறைமறை  திருக்குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஒப்பிட்டு சரியானதை விளங்கி கொள்வார்கள் மவ்லூதுகளுக்கு வக்காலத்து வாங்கி பேசும் ஜமாஅத்துல் உலமா அறிஞர்கள் பல ஆண்டுகளாக  இதற்கு முழுமையாக தங்களை  தயாராக்கி கொள்ளவில்லை காரணம் மவ்லூத் வரிகளை தமிழ் மொழியில் பொருள் படுத்தி வெளியிட்டால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திணறி விடுவோம் என்ற அச்சமே காரணம் முப்ப

சந்தைகள்

      குமரிமாவட்ட சந்தைகள்                     ******** சில நூற்றாண்டு முன் வரை பண்ட மாற்று முறையில் தான் வணிக முறை நம் நாட்டில் இருந்து வந்தது நெல்லை கொடுத்து தேங்காய் வாங்குவது எண்ணை கொடுத்து புளி வாங்குவது இம்முறைக்கு தான் பண்ட மாற்று முறை இம்முறையில் அனைத்து மக்களும் தங்களிடம் உள்ள பொருட்களை  ஒரே இடத்தில் கொண்டு வந்து பரிமாறி கொள்வதற்கு ஏற்படுத்த பட்டவை தான் சந்தைகள் முகலாய மன்னர்கள் காலத்தில் தான் பண்டமாற்று முறை  பணத்தை கொண்டு எளிமையாக்கப்பட்டது அவ்வகையில் குமரிமாவட்டத்திலும் பல சந்தைகள் உருவாக்கப்பட்டது ஞாயிறு வியாழன் ஆகிய இரு கிழமைகளில் வடசேரியில் கூடும் சந்தைக்கு பெயர்           கனக மூல சந்தை திங்கள் கிழமை தோறும் இரணியலில் கூடும் சந்தைக்கு பெயர்               திங்கள் சந்தை திங்கள் வியாழன் கிழமைகளில் களியக்காவிளையில் கூடும் சந்தைக்கு பெயர்      களியக்காவிளை சந்தை மகாதானபுரத்தில் செவ்வாய் வியாழன் கிழமைகளில் கூடும் சந்தைக்கு பெயர்              தாலியறுத்தான் சந்தை இது போல் கருங்கல் சந்தை வெள்ளிச்சந்தை அந்திச்சந்தை என்றும் சில சந்தைகள் உள்ளது இதில் தாலியறுத

சிந்தனையாளர்களுக்கு

      சிந்தினையாளர்களுக்கு                *************                   18-10-2020           J . Yaseen iMthadhi                       ==================== சிந்தனையை தூண்டும் விதமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தும் போது அந்த கருத்தை எத்தனை மக்கள் கேட்கின்றனர் அல்லது பார்கின்றனர் அல்லது பரப்புகின்றனர் என்பதை வைத்து வெளியிடப்படும் கருத்துக்கு  மதிப்பிடுவதாக இருந்தால் எந்த நல்ல கருத்துக்களும் அதற்குரிய மதிப்பீடை நிச்சயம் பெறாது நற்சிந்தனையும் நல்ல தகவலும் சமூகத்தை சென்றடைவதை விட பயனற்ற தகவல்களும் துதிபாடும் செய்திகளும் இழித்து பேசும் செய்திகளும் காமரச செய்திகளும் சமூகத்திற்கு பயன் தராத செய்திகளும் இன்னும் அது போல்  பிற செய்திகள் தான் மக்கள் மன்றத்தை விரைவாக சென்றடையும் இது தான் நடை முறை உண்மை அதையும் மீறி சில நல்ல கருத்துக்கள்  மக்கள் மன்றத்தில்  விரைவாக சென்றாலும் அந்த கருத்தை வெளியிடுபவர் சமூகத்தில்  பிரபல்யமானவராக அடையாளம் காணப்பட்டவராக  அல்லது ஒரு இயக்கத்தை அமைப்பை முன்னிலை படுத்தி தன்னை அடையாளப்படுத்தி கொண்டவராக  இருப்பார் எதையும் சாராது எதையும் புகழாது தன்னிலை நின்று வெளியிடப்

சமூக ஒற்றுமை

    முஸ்லிம் சமுதாயத்திற்கும்         சமூக அமைப்பு மற்றும்       முஸ்லிம் கட்சிகளுக்கும்               வேண்டுகோள்                   ♦♦♦♦                  11:10:2020 Bismillahir Rahmanir Raheem          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• இந்திய திருநாட்டை உருவாக்குவதற்கும் வெள்ளையனிடம் இருந்து அடிமை இந்தியாவை மீட்டு எடுப்பதற்கும்  இருக்கும் சதவிகதத்தை விட கூடுதலான தியாகங்களை  செய்த முஸ்லிம் சமுதாயம் இந்தியாவை ஆளுமை செய்வதற்கு எந்த சமூகத்தை விடவும் தகுதி படைத்த முஸ்லிம் சமுதாயம் ஆட்சியாளர்களால் சூழ்ச்சியாளர்களால் இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்படும் நிலையை இன்று கொண்டிருப்பதற்கும் பழமையான பாபர் மஸ்ஜிதை பறிகொடுத்து நிற்பதற்கும் நீதிமன்றத்தால் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டதற்கும் மூல காரணம் அரசியல் அதிகாரங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் ஆதிக்கம் மிகவும் பின்தங்கியிருப்பது தான் முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களை தங்களின் ஏணிப்படியாக மாத்திரமே அனைத்து கட்சிகளும்  நெடுங்காலம

காலை சிந்தனை ஒன்பது

காலை சிந்தனை பாகம் ஒன்பது         நன்றி கெட்ட ஜென்மம்                   11:10:2020          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• வாழ்வுக்கு தேவையான வசதிகளை இறைவன் வழங்கி இருக்கும் போது தன்னிடத்தில் உள்ள செல்வத்தை மறைத்து வைத்து கொண்டு பொருளாதாரத்தில் சிரமப்படுவதை போல் தனது பேச்சை உடையை செய்கையை மக்கள் முன் சித்தரித்து  காட்டி கொள்பவன் இறைவன் பார்வையில் குற்றவாளியே தானம் செய்யாமல் இருக்கும் தன்மையை கூட ஒரு வகையில் திருப்திபட்டு கொள்ளலாம் ஆனால் தானும் தானம் வாங்கும் நிலையில் தான் வறுமையில்  உள்ளேன் என்று இறைவன் வழங்கிய செல்வத்தை மூடி மறைக்க முயற்சிப்பவனை விட நன்றி கெட்ட ஜென்மம் எவனும் இருக்க முடியாது தன்னிடம் உள்ள செல்வத்தை மூடி மறைத்தாலும்  இறைவன் வழங்கிய செல்வத்தை அவனை அறியாமல் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திடம் வெளிப்படுத்தும் சூழலை இறைவன் ஏற்படுத்தி கொண்டே இருப்பான் என்ற சாதாரண பகுத்தறிவை கூட பெறாத ஜென்மங்கள் இவர்கள் இவர்களில் ஒருவனாக நம்மை இறைவன்  ஆக்காது இருக்க என்றும் ப

நீதிபதிகளும் தீர்ப்புகளும்

      தீர்ப்புகளும் நீதிபதிகளும்                        *******                  06-10-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1381          ==================== ஒரு தவறை சுயபுத்தி இழந்தவன் செய்தால் அல்லது நிர்பந்தத்தில் செய்தால் அதை செய்த மனிதன்  குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்படுவது இல்லை அதே தவறை ஒருவன் திட்டமிட்டு செய்தாலும் சரி அல்லது  உணர்ச்சி வசப்பட்டு செய்தாலும் சரி அவனும் குற்றவாளி என்பதே உலகில் கடைபிடிக்கப்பட்டு வரும்  நியதியாகும் தற்போது பீஜேபி ஆட்சியில் நீதின்றங்களில் நீதிபதிகளாக இருக்கும் நபர்கள் ஒரு தவறை உணர்ச்சி வசப்பட்டு செய்தால் அது தவறு இல்லை என்றும் அதற்காக தண்டிப்பது நியாயம் இல்லை என்றும் பாபர் மஸ்ஜித் குற்றவாளிகள்  வழக்கில் புதுமையாக  தீர்ப்பை வழங்கி இந்திய மக்களுக்கே உலகரங்கில் அவமானத்தை ஏற்படுத்தி  உள்ளனர் இதில் வேதனையான  என்னவெனில் பாபர் மஸ்ஜிதை  இடித்த எந்த குற்றவாளியும் இந்த தவறை நாங்கள் அறியாமல் செய்து விட்டோம் அல்லது  உணர்ச்சி வசப்பட்டு செய்து விட்டோம் என்று நீதிபதிகளிடம் கெஞ்சவில்லை இன்று வரை

நம்பிக்கை இழந்து வரும் குடிமக்கள்

     நம்பிக்கை இழந்து வரும்                  குடிமக்கள்                        *******                  05-10-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1380            ==================== நாட்டில் சிறுமிகள் கற்பழித்து படுகொலை செய்யப்படும் பொழுது அதை எதிர்த்து கடுமையான கண்டனங்கள் எழுவது சடங்காகவே தற்போது மாறி விட்டது ஆர்ப்பாட்டம் போராட்டம் என்பது மக்களின் கோபத்தை தற்காலிகமாக  கட்டுப்படுத்தும் சூழ்சிக்காக  மாத்திரமே அரசால் அனுமதிக்கப்படுகிறது என்ற எண்ணமே நாட்டு மக்களிடம்  மேலோங்கி வருகிறது இது நீடித்தால் நம் நாட்டில் புரட்சிப்பாதையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி  விடும் என்ற சாதாரண பகுத்தறிவை கூட ஆட்சியாளர்கள் உணரவில்லை எந்த கோபத்திற்கும் எல்லை உண்டு அந்த எல்லையை தாண்டும் பொழுது மனிதன் விரக்தியில் தவறான வழிகளை தேர்வு செய்யும் வாய்ப்பே அதிகரித்து விடும் நீதிமன்றங்கள் தான் ஒரு குடிமகனின் இறுதியான நம்பிக்கை இன்று அந்த நம்பிக்கையை  சில நீதிபதிகளே தகர்த்து வருவது ஆரோக்யமான வழி அல்ல என்பதற்கு சமீபத்திய சில  தீர்ப்புகள் சான்றாக உ