நீதிபதிகளும் தீர்ப்புகளும்

      தீர்ப்புகளும் நீதிபதிகளும்
                       *******
                 06-10-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
                   கட்டுரை 1381
         ====================

ஒரு தவறை சுயபுத்தி இழந்தவன் செய்தால்
அல்லது நிர்பந்தத்தில் செய்தால் அதை செய்த மனிதன்  குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்படுவது இல்லை

அதே தவறை ஒருவன் திட்டமிட்டு செய்தாலும் சரி அல்லது  உணர்ச்சி வசப்பட்டு செய்தாலும் சரி அவனும் குற்றவாளி என்பதே உலகில் கடைபிடிக்கப்பட்டு வரும்  நியதியாகும்

தற்போது பீஜேபி ஆட்சியில் நீதின்றங்களில் நீதிபதிகளாக இருக்கும் நபர்கள் ஒரு தவறை உணர்ச்சி வசப்பட்டு செய்தால் அது தவறு இல்லை என்றும் அதற்காக தண்டிப்பது நியாயம் இல்லை என்றும் பாபர் மஸ்ஜித் குற்றவாளிகள்  வழக்கில் புதுமையாக  தீர்ப்பை வழங்கி இந்திய மக்களுக்கே உலகரங்கில் அவமானத்தை ஏற்படுத்தி  உள்ளனர்

இதில் வேதனையான  என்னவெனில் பாபர் மஸ்ஜிதை  இடித்த எந்த குற்றவாளியும் இந்த தவறை நாங்கள் அறியாமல் செய்து விட்டோம் அல்லது  உணர்ச்சி வசப்பட்டு செய்து விட்டோம் என்று நீதிபதிகளிடம் கெஞ்சவில்லை

இன்று வரை பாபர் மஸ்ஜிதை இடித்தது சரி என்றும் இனியும் இந்தியாவில்  இடிக்கப்பட வேண்டிய பள்ளிவாசல்கள் மூன்று ஆயிரம் இருப்பதாகவும் பகிரங்கமாக பேசி வருகின்றனர்

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவன்
நான் நீதிபதியின் மகளை  திட்டமிட்டு கற்பழிக்கவில்லை ஆசையில்  உணர்ச்சிவசப்பட்டு தான் கற்பழித்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தால் அல்லது உணர்ச்சி வசப்பட்டு  தான் நீதிபதியின் மகளை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தால் நீதிபதிகள் அதை ஏற்று குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி  கற்பழித்தவனை உத்தமன் என்று தீர்ப்பு வழங்குவார்களா  அல்லது அவனுக்கு கடுமையான  தண்டனையை தீர்ப்பாக வழங்குவார்களா

நாட்டு மக்களை சட்டம் அறியாத அறிவிலிகளாக நினைத்து கொண்டு இந்திய அரசியல் சாசனத்திற்கு மாற்றமாகவும் நீதிக்கு  எதிராகவும்  தீர்ப்பளிக்கும் (அ) நீதிபதிகள் தங்களை நீதிபதி என்று சொல்லி கொள்வதை கேவலமாக கருத வேண்டும்

இவ்வாறு தீர்ப்பளித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் உண்ணும் உணவை அவமானமாக கருத வேண்டும்

உலகளவில் ஒரு குற்றம் பல ஆதாரங்களோடும் ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பு மூலமும் நடைபெற்ற ஒரே குற்றம் பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றம் மட்டுமே

       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்