சமூக ஒற்றுமை

    முஸ்லிம் சமுதாயத்திற்கும்
        சமூக அமைப்பு மற்றும்
      முஸ்லிம் கட்சிகளுக்கும்
              வேண்டுகோள்
                  ♦♦♦♦
                 11:10:2020
Bismillahir Rahmanir Raheem
         <><><><><><><><><><>
          J . Yaseen iMthadhi
                     •••••••••••

இந்திய திருநாட்டை உருவாக்குவதற்கும் வெள்ளையனிடம் இருந்து அடிமை இந்தியாவை மீட்டு எடுப்பதற்கும்  இருக்கும் சதவிகதத்தை விட கூடுதலான தியாகங்களை  செய்த முஸ்லிம் சமுதாயம்

இந்தியாவை ஆளுமை செய்வதற்கு எந்த சமூகத்தை விடவும் தகுதி படைத்த முஸ்லிம் சமுதாயம்

ஆட்சியாளர்களால் சூழ்ச்சியாளர்களால் இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்படும் நிலையை இன்று கொண்டிருப்பதற்கும் பழமையான பாபர் மஸ்ஜிதை பறிகொடுத்து நிற்பதற்கும் நீதிமன்றத்தால் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டதற்கும் மூல காரணம் அரசியல் அதிகாரங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் ஆதிக்கம் மிகவும் பின்தங்கியிருப்பது தான்

முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களை தங்களின் ஏணிப்படியாக மாத்திரமே அனைத்து கட்சிகளும்  நெடுங்காலமாக பயன்படுத்தி  விட்டனர்

அதற்கு ஏற்றார் போல் முஸ்லிம் சமுதாயமும் தங்களின் ஒட்டுக்களின் மொத்த பலத்தை பல கூறுகளாக பிரித்து பிறர்கள் நம் வாக்குகளை வைத்து ஆட்சி கட்டிலில் ஏறுவதற்கு  சமுதாய பலத்தை இத்தனை காலம் தானம் செய்து விட்டோம்

யாருக்கு ஓட்டு போட்டால் நமக்கு குரல் கொடுப்பார்கள்
என்று சிந்தித்து கொண்டே இருந்தோமே தவிர

யாருக்கு ஓட்டு போட வேண்டும் ?
ஓட்டுக்களை எவ்வாறு ஒரே அணியில் திரட்டி போட வேண்டும் ?
இஸ்லாமிய இயக்கங்களை அமைப்புகளை கட்சிகளை இவ்விசயத்தில் எவ்வாறு ஒரே அணியில் இணைக்க முயற்சிக்க வேண்டும் ?

நம் ஓட்டுக்களை எவ்வாறு அரசியல் தலைவர்களிடம்  ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஞானத்தையும் சூட்சமத்தையும்  யோசிக்க தவறி விட்டோம்

இதன் விளைவு நமது ஓட்டுக்களை பெற்று பல காலம் ஆட்சி கட்டிலை அனுபவித்த கட்சிகளும் கூட கடுமையான இழப்புகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் நேரங்களில் பொதுமக்களை போல் நமக்கு  ஆறுதலை மாத்திரமே அறிக்கைகளாக வெளியிட்டே பல காலம் நம் எதிர்காலத்தை பின்னடைவில் தள்ளி விட்டனர்

இறைநம்பிக்கையாளர்களை விட இறைமறுப்பாளர்களை இறை இணைவைப்பாளர்களை அரசியல்  பாதுகாவலர்களாக கருதும் மனோநிலையை சாத்தான் நமது எண்ணத்தில் ஆழமாக விதைத்து விட்டான்

கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்து கொண்டு கொள்கையே இல்லாத கட்சிகளை அரசியல்வாதிகளை போற்றவும் தூற்றவும் தான்
நம் வாழ்நாளை தத்ரூபமாக தொலைத்துள்ளோம்

இந்நிலை மாறுவதற்கு அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும் அதன்  தலைவர்களையும் ஜமாத்துகளையும் தேர்தல் களத்தில் ஒரே அணியில் இணைக்க அனைவரும் பாடு பட வேண்டும்

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அவர்கள் வீரியமாக செயல்பட வீரியத்தோடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

கட்சி தலைவர்களை தனிதனியாக சந்தித்து சீட்டு கேட்டு நம் கண்ணியத்தை இறக்குவதை தவிர்த்து
நம் சமுதாய ஓட்டுக்களையே வாக்குகளை செலுத்தும்  நிபந்தனையாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி அதை ஏற்று முன்வரும் கட்சிக்கே வாக்களிக்கும் போது நம் சமுதாயத்துக்கு அதுவே அரசியல் பலத்தை உண்டாக்கும்

மார்க்கத்திற்காக வேறுபட்டு இருப்பது வேறு
முஸ்லிம் சமூகத்தித்தின் உலக முன்னேற்றத்திகாக உரிமைக்காக ஓர் அணியில் இணைந்திருப்பதும் வேறு

இவ்விரு கோணத்தையும் சரியாக புரிந்து செயல்படுவோம்

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏ 
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்
நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்
(அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள் உங்கள் பலம் குன்றிவிடும் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள்  நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்

        (அல்குர்ஆன் : 8:46)

      நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்