நம்பிக்கை இழந்து வரும் குடிமக்கள்
நம்பிக்கை இழந்து வரும்
குடிமக்கள்
*******
05-10-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1380
====================
நாட்டில் சிறுமிகள் கற்பழித்து படுகொலை செய்யப்படும் பொழுது அதை எதிர்த்து கடுமையான கண்டனங்கள் எழுவது சடங்காகவே தற்போது மாறி விட்டது
ஆர்ப்பாட்டம் போராட்டம் என்பது மக்களின் கோபத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் சூழ்சிக்காக மாத்திரமே அரசால் அனுமதிக்கப்படுகிறது என்ற எண்ணமே நாட்டு மக்களிடம் மேலோங்கி வருகிறது
இது நீடித்தால் நம் நாட்டில் புரட்சிப்பாதையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி விடும் என்ற சாதாரண பகுத்தறிவை கூட ஆட்சியாளர்கள் உணரவில்லை
எந்த கோபத்திற்கும் எல்லை உண்டு அந்த எல்லையை தாண்டும் பொழுது மனிதன் விரக்தியில் தவறான வழிகளை தேர்வு செய்யும் வாய்ப்பே அதிகரித்து விடும்
நீதிமன்றங்கள் தான் ஒரு குடிமகனின் இறுதியான நம்பிக்கை
இன்று அந்த நம்பிக்கையை சில நீதிபதிகளே தகர்த்து வருவது ஆரோக்யமான வழி அல்ல என்பதற்கு சமீபத்திய சில தீர்ப்புகள் சான்றாக உள்ளது
2014 முதல் 2016ம் ஆண்டு வரை இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்து வந்துள்ளது
இந்த காலகட்டத்தில், மொத்தம் 1,10,333 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
இதன்படி, 2014ம் ஆண்டில் 36,735 கற்பழிப்புகளும்,
2015ம் ஆண்டில் 36,735 கற்பழிப்புகளும்
2016ம் ஆண்டில் 38,947 கற்பழிப்புகளும் நிகழ்ந்துள்ளன
2014ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,39,457 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
இதேபோல, 2015ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,29,243 குற்றச் சம்பவங்களும்
2016ம் ஆண்டில் 3,38,954 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருப்பது நினைவு படுத்தும் விசயமாகும்
இதில் எத்தனை காமுகர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்
குழந்தைகளை கற்பழிக்கும் குற்றவாளிகளை மக்களே அடித்து கொலை செய்யலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் பத்தே நாளில் இது சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் உலகை விட்டே மாய்ந்து விடுவார்கள்
குறிப்பாக குழந்தைகளை கற்பழிக்கும் காமுகர்கள் மதுபோதை அடிமைகளாக இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது
அதனால் தான் பெற்ற பிள்ளையிடம் கூட தவறாக நடக்கும் தருதலைகள் பெருகி வருகின்றனர்
குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த பாலியல் வன்புணர்வுக்கு மேல்ஜாதி என்று கருதும் ஈனப்பிறவிகளால் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர்
இந்நிலையை தொடர விட்டால் நாட்டு மக்களின் கோபம் திசை மாறி விடும் என்பதை அரசும் நீதிமன்றங்களும் உணர வேண்டும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment