சிந்தனையாளர்களுக்கு

      சிந்தினையாளர்களுக்கு
               *************
                  18-10-2020
          J . Yaseen iMthadhi                 
     ====================

சிந்தனையை தூண்டும் விதமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தும் போது
அந்த கருத்தை எத்தனை மக்கள் கேட்கின்றனர் அல்லது பார்கின்றனர் அல்லது பரப்புகின்றனர் என்பதை வைத்து வெளியிடப்படும் கருத்துக்கு  மதிப்பிடுவதாக இருந்தால் எந்த நல்ல கருத்துக்களும் அதற்குரிய மதிப்பீடை நிச்சயம் பெறாது

நற்சிந்தனையும் நல்ல தகவலும் சமூகத்தை சென்றடைவதை விட பயனற்ற தகவல்களும் துதிபாடும் செய்திகளும் இழித்து பேசும் செய்திகளும் காமரச செய்திகளும் சமூகத்திற்கு பயன் தராத செய்திகளும் இன்னும் அது போல்  பிற செய்திகள் தான் மக்கள் மன்றத்தை விரைவாக சென்றடையும் இது தான் நடை முறை உண்மை

அதையும் மீறி சில நல்ல கருத்துக்கள்  மக்கள் மன்றத்தில்  விரைவாக சென்றாலும் அந்த கருத்தை வெளியிடுபவர் சமூகத்தில்  பிரபல்யமானவராக அடையாளம் காணப்பட்டவராக  அல்லது ஒரு இயக்கத்தை அமைப்பை முன்னிலை படுத்தி தன்னை அடையாளப்படுத்தி கொண்டவராக  இருப்பார்

எதையும் சாராது எதையும் புகழாது தன்னிலை நின்று வெளியிடப்படும் கருத்துக்கள் எப்போதும் மக்கள் மன்றத்தில் பரவுவதும் இல்லை அவ்வாறு பரவுவதை பலர்கள் ஜீரணிப்பதும் இல்லை

இந்நிலையை அனுபவ ரீதியாக அடைந்தவர்கள் எதார்த்தமாக இவைகளை  கடந்து விடுவது தான் சிறந்த தன்மை

முயற்சிக்குரிய நன்மைகளை மறுமையில் இறைவன் நிச்சயம் தருவான் என்ற நம்பிக்கையே நம் சிந்தனையை வலுப்படுத்தும்

        நட்புடன்   J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்