சந்தைகள்
குமரிமாவட்ட சந்தைகள்
********
சில நூற்றாண்டு முன் வரை பண்ட மாற்று முறையில் தான் வணிக முறை நம் நாட்டில் இருந்து வந்தது
நெல்லை கொடுத்து
தேங்காய் வாங்குவது
எண்ணை கொடுத்து
புளி வாங்குவது
இம்முறைக்கு தான் பண்ட மாற்று முறை
இம்முறையில் அனைத்து மக்களும் தங்களிடம் உள்ள பொருட்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து பரிமாறி கொள்வதற்கு ஏற்படுத்த பட்டவை தான் சந்தைகள்
முகலாய மன்னர்கள் காலத்தில் தான் பண்டமாற்று முறை பணத்தை கொண்டு எளிமையாக்கப்பட்டது
அவ்வகையில் குமரிமாவட்டத்திலும் பல சந்தைகள் உருவாக்கப்பட்டது
ஞாயிறு வியாழன் ஆகிய இரு கிழமைகளில் வடசேரியில் கூடும் சந்தைக்கு பெயர்
கனக மூல சந்தை
திங்கள் கிழமை தோறும் இரணியலில் கூடும் சந்தைக்கு பெயர்
திங்கள் சந்தை
திங்கள் வியாழன் கிழமைகளில் களியக்காவிளையில் கூடும் சந்தைக்கு பெயர்
களியக்காவிளை சந்தை
மகாதானபுரத்தில் செவ்வாய் வியாழன் கிழமைகளில் கூடும் சந்தைக்கு பெயர்
தாலியறுத்தான் சந்தை
இது போல்
கருங்கல் சந்தை
வெள்ளிச்சந்தை
அந்திச்சந்தை
என்றும் சில சந்தைகள் உள்ளது
இதில் தாலியறுத்தான் சந்தை என்பது குமரிமாவட்டத்தில் ஜாதிக்கொடுமை உச்சகட்டத்தில் இருந்ததை எதிர்த்து சில பெண்கள் செய்த புரட்சியால் நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வோடு தொடர்புடையது
தாலியறுத்தான் சந்தை பற்றிய வரலாறு பற்றி தனி பதிவில் இடம் பெறும்
தேடல் தகவல்
J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment