காலை சிந்தனை ஒன்பது
காலை சிந்தனை பாகம் ஒன்பது
நன்றி கெட்ட ஜென்மம்
11:10:2020
<><><><><><><><><><>
J . Yaseen iMthadhi
•••••••••••
வாழ்வுக்கு தேவையான வசதிகளை இறைவன் வழங்கி இருக்கும் போது
தன்னிடத்தில் உள்ள செல்வத்தை மறைத்து வைத்து கொண்டு பொருளாதாரத்தில் சிரமப்படுவதை போல் தனது பேச்சை உடையை செய்கையை மக்கள் முன் சித்தரித்து காட்டி கொள்பவன் இறைவன் பார்வையில் குற்றவாளியே
தானம் செய்யாமல் இருக்கும் தன்மையை கூட ஒரு வகையில் திருப்திபட்டு கொள்ளலாம்
ஆனால் தானும் தானம் வாங்கும் நிலையில் தான் வறுமையில் உள்ளேன் என்று இறைவன் வழங்கிய செல்வத்தை மூடி மறைக்க முயற்சிப்பவனை விட நன்றி கெட்ட ஜென்மம் எவனும் இருக்க முடியாது
தன்னிடம் உள்ள செல்வத்தை மூடி மறைத்தாலும் இறைவன் வழங்கிய செல்வத்தை அவனை அறியாமல் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திடம் வெளிப்படுத்தும் சூழலை இறைவன் ஏற்படுத்தி கொண்டே இருப்பான் என்ற சாதாரண பகுத்தறிவை கூட பெறாத ஜென்மங்கள் இவர்கள்
இவர்களில் ஒருவனாக நம்மை இறைவன் ஆக்காது இருக்க என்றும் பிராத்திப்போம்
يَّومَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும்
(இன்னும்) இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது
ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்)
(அல்குர்ஆன் : 9:35)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment