Posts

Showing posts from September, 2020

நீதியும் பாபர் மஸ்ஜிதும்

         அநீதியின் உச்சகட்டம்      பாபர் மஸ்ஜித் குற்றவாளி                             *******                  30-09-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1376            ==================== நீதிமன்றத்தின் மீது நாட்டு மக்களுக்கு இருக்கும் மரியாதையில் கடுகளவு மரியாதை கூட இந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆளுபவர்களுக்கும் சில நீதிபதிகளுக்கு அறவே இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்து வருகின்றனர் கொலை செய்தவனே நான் தான் கொலை செய்தேன் என்று வீடியோ ஆதாரங்களோடு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும் நீ கொலை செய்தது நிரூபிக்கபடவில்லை என்று குற்றவாளியே வியக்கும் அளவு கொலையாளிக்கு பரிந்து பேசி கொலையாளி நீதிவான் என்று  தீர்ப்பு வழங்குவதற்கும் பாபர் மஸ்ஜிதை  இடித்து தரைமட்டமாக்கிய சங்கிகளுக்கு சாதகமாக 30:09:2020 அன்று லக்னோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் கடுகளவு வேறுபாடும் இல்லை பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முன் கூட்டியே தீட்டப்பட்ட சதி அல்ல என்று நீதிபதிகள் தனது அறிக்கையில் கூறியுள்ளதும் கரசேவையை தடுக்க கரசேவைக்கு அழைத்து சென்றவர்களே

முஸ்லிம்களின் அரசியல் பயணம்

     முஸ்லிம்களின் அரசியல்                    பயணம்         <><><><><><><><><><>                   29:09:2020           J . Yaseen iMthadhi                      ••••••••••• இயக்கங்களும் இஸ்லாமிய பெயரில் செயல்படும் கட்சிகளும் முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்கு என்பதே அனைத்து தலைவர்களும் தொடர்ந்து நெடுங்காலமாக  சொல்லி வரும் செய்தியாகும் அரசாங்கத்தாலும் இஸ்லாமிய எதிரிகளாலும்  முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது அந்நேரத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்காக  ஒரே மேடையில் கைகோர்த்து  இணைந்து நிற்கும் அனைத்து  தலைவர்களும் தேர்தல் நேரங்களில் மாத்திரம் வழமை போல் பிளவுபட்டு  செயல்படுவதையும் சீட்டுகளை பெறுவதற்கு அரசியல்  தலைவர்களின் பதிலை எதிர் பார்த்து காத்திருப்பதையும்  கண்டு வருகிறோம் ஒரே தொகுதியில் இரு இஸ்லாமிய கட்சிகள் களத்தில் எதிர் எதிரே  நின்று முஸ்லிம்களின்  ஓட்டுக்களை சிதற செய்து கொண்டிருப்பதும் முஸ்லிம் சமுதாய ஓட்டுக்களை வலுவற்றதாக மாற்றுவதும் தான் நடைமுறையாக இருந்து வருகிறது ஒரு முஸ்லிம்  எந்த கட்ச

Share நோயாளிகள்

             Share நோயாளிகள்                      ************  26:09:2020 .J.YASEEN IMDHATHI                       ********** கண்ணால் காணும் செய்திகளை சிந்தனையின்றி  பரப்பும் கருத்து மனநோய் முஸ்லிம்களிடம் உள்ளது என்பதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன  அதில் ஒன்று தான் 25:09:2020 வெள்ளி கிழமை பள்ளிவாசல்களில் கொரோனாவை முன்னிட்டு கடை பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்  பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்கு அரசாங்க அதிகாரிகள் வருகிறார்கள்  எனவே கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற வாட்சப் புரளி ஒரு கருத்தை பரப்பும் நபர் அதை நான் தான் எழுதினேன் இந்த ஆதாரத்தை வைத்து வெளியிடுகிறேன் என்ற சுய விபரத்தை பதிக்க வேண்டும்  அது போன்ற எந்த விபரமும் இல்லாமல் குழுமங்களில் பரப்பப்பட்ட மொட்டை பதிவே அது  சமூகத்தின் அச்சத்தை காரணமாக வைத்து எதை வெளியிட்டாலும் அதை பரப்புவதற்கு என்று முஸ்லிம் சமூகத்தில் பல மூடர்கள் இருக்கிறார்கள் என்ற ஆழமான நம்பிக்கை தான் இது  போன்ற கற்பனை  பதிவுகளை தயாரிப்போரின் அபார நம்பிக்கை அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக பல முஸ்லிம்கள் அந்த மொட்டை பதிவை வாட்சப் குழுமங்களில் பரப்பியும் விவாதி

இதயத்தில் இடம் பிடிக்காத திருக்குர்ஆன்

   இதயத்தில் இடம் பெறாத                  இறைவேதம்                        *******                  20-09-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1375            ==================== அரசியல் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம் எதிரிகளுக்கு பதில் கூறுவதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம் பொழுதுபோக்குகளில் சினிமா சீரியல்களில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆர்வம் இயக்கத்தை அல்லது தனி மனிதனை போற்றுவதில்   அல்லது தூற்றுவதில் அவர்களுக்கு விளம்பரம் செய்வதில் முஸ்லிம்களுக்கு  இருக்கும் ஆர்வம் இறைவன் வழங்கிய தூய மார்க்கத்தை அறிவதில் குறைந்தபட்சம்  இருந்திருந்தால் கூட  இஸ்லாத்தின் தாக்கம் எப்போதோ முஸ்லிம்களின் வாழ்வில் பிரகாசமாய் இருந்திருக்கும் திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் பெயர்கள் சூராக்களின் பெயர்களை கூட வரிசையாக காணாது சொல்ல தெரியாத அவலம் பரம்பரை முஸ்லிம் என்று தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு இருக்காது குர்ஆனை அதன் மூலமொழி அமைப்பில் கூட ஓத தெரியாதவர்கள் குர்ஆனை நேசிப்பதாக கூறுவது வாய் வார்த்தையாக தான் புரி

எதார்த்தம் புரிவோம்

         எதார்த்தம் புரிவோம்     காலை சிந்தனை பாகம் எட்டு                <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்று நம்மை நாம் மாற்றி கொள்வதை விட அவனது நலனுக்கு ஏற்று நம்மை நாமே  மாற்றி கொள்வதும் ஒரு மனிதனின் திருப்தியை பெற நாம் நடிப்பதை விட நம் வாழ்கை திருப்திக்கு ஏற்று நாம் வாழ்ந்து காட்டுவதும் வறுமையை அஞ்சி நாம் வாழ்வதை விட இருப்பதை கொண்டு திருப்தியடையும் தன்மையை நம்மில் வளர்த்தி கொள்வதும் தான் மனிதனின் நல் வாழ்வுக்கு ஏற்றது யாராலும் இயன்றது இயலாலததை நோக்கி வீண் பயணம் செய்வதை விட இயன்றதை நோக்கி நம் நேரத்தை கழிப்பதும் இல்லாததை நினைத்து வருந்துவதை விட கைவசம் இருப்பதை கொண்டு மகிழ்சியடைவதும்  நம் மனதுக்கு சாந்தம் தரும் இதுவா அதுவா  ? என்ற பறக்கும் மனம் நம் வாழ்கை  சிறகை முறிக்கும் இதுவே சரியே என்ற மனக்கட்டுப்பாடு தான் நம்  மனதையும் பக்குவமாய் நம்மில் இணைக்கும் இது பழமொழி அல்ல எதார்த்த நடைமுறை         நட்புடன்  J . இம்தாதி

படிப்பறிவு பொதுஅறிவு

    காலை சிந்தனை பாகம் ஏழு       படிப்பறிவு பொது அறிவு          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• படிப்பறிவு வேறு பொது அறிவு வேறு ஒரு மனிதன் உலகில்  வாழ்வதற்கு பொது அறிவு போதுமானது படிப்பறிவு பொருளியல் பலத்தை கூட்டுவதற்கு தானே தவிர அது படித்தால்  தான் மனிதன் நல்லவனாக ஏழ்மைக்கு அப்பாற்பட்டவனாக நிம்மதியாக  வாழ முடியும் என்பது அல்ல அது கல்வியாளர்களால் செயற்கையாக  ஊட்டப்பட்டுள்ள ஒரு மாயை அதன் விளைவே இந்தியாவில் தற்கொலை புள்ளி விபரத்தில் படித்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது உயிரை மாய்கும் அளவு தேர்வு செய்யும்  துறை ஒருவனின் பகுத்தறிவை முடக்கினால் அதற்கு பெயர் கல்வி அல்ல மாறாக அதுவே  போதை போதை எந்த வடிவில் இருந்தாலும் அது மனிதனுக்கு விளைவுகளை தான் எற்படுத்தும் கல்வி கண்ணை போன்றது என்பது மெருகூட்டும் சொல் உயிரே பொன்னை விட மேலானது என்பது தான் நடைமுறை  உண்மை தற்கொலை தான் எதற்கும் தீர்வு என்று ஒருவன் முடிவு செய்தால்  அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்வது தான் அவனை பொற

உடல் மண்ணுக்கு உயிர் இறைவனுக்கு

          உடல் மண்ணுக்கு        உயிர் இறைவனுக்கு              **************** வாழ்வில் சிலரது மரணம் செய்தியாகவும் சிலரது மரணம்  அதிர்ச்சியாகவும் சிலரது மரணம் ரணமாகவும் சிலரது மரணம் இழப்பாகவும் சிலரது மரணம் பேரிழப்பாகவும் அமைந்து விடும் இதில் எந்த மரணமும் நாளை நம்மையும் தழுவியே தீரும் என்பது தான் மரணம் நமக்கு கற்று தரும் பாடம் நம்மை விட்டு கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்நாளை குறைக்கிறது என்பது தான் நிஜம் கடந்த நிமிடங்களை நினைத்து வருந்துவதை விட கடக்கவிருக்கும் நிமிடங்களை நினைத்து வாழ்வில் திருந்துவதும் கடந்த காலங்களில் செய்து விட்ட தவறுகளை நினைத்து வருந்துவதும்  தான் மனிதனின் சிறப்பு தன்மை மண்ணில் இருந்து வளர்ந்த உடலை இறுதியில் மண்ணுக்கே சொந்தமாக்கும் நாம் அந்த உடல் செயல்பட மூலமாக அமைந்த உயிரை கொடுத்த இறைவனிடமே நம் உயிர் சென்று விடும் என்பதை மறவ வேண்டாம் قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُم

அரபி ஹிந்தி தொடர்பு

   ஹிந்தி மொழி வேடதாரிகள்                ============                   08-09-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              ===============       எம்மொழியும் மனிதன் தனது கருத்தை வெளிப்படுத்த உதவும் கருவி என்பதை தாண்டி வேறு எந்த சிறப்பும் மொழிகளுக்கு இல்லை ஒரு மொழியை பேசுவதால் ஒருவன் சிறந்தவன் என்றால் எம்மொழியும் பேச இயலாத ஊமையனே மேலானவன் காரணம் மொழியின்றி உடல் அசைவுகளால் தனது கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் ஊமையனுக்கே உண்டு காவிச்சிந்தனை கொண்டவர்கள் ஹிந்தி மொழியை வேத மொழியாக கருதுவதும் அதை மக்களுக்கு  திணிப்பதும் தான் தற்போதைய விவகாரம் உண்மையில் காவிசிந்தனை உடையவர்கள் ஹிந்தி மொழி மீது பற்றுடையவர்களாக இருந்தால் அவர்கள் அரபு மொழிக்கு தான் அதிகம் முக்கியதுவம் வழங்க வேண்டும் காரணம் அரபு மொழியின் கலப்படத்தில்  இருந்து பிறந்ததே ஹிந்தி மொழி என்ற கசப்பான உண்மையை காவிச்சிந்தனை உடையவர்கள் புரிந்து கொள்ளவில்லை அரபு  மொழியை சற்று எளிமையாக்கியே உருது மொழி முகலாயர்களால்   உருவாக்கப்பட்டது எனவே தான் உருது மொழி  பேசுபவர்களுக்கு அரபு மொழி எளிமையாக  புரிகிற

உறக்கம் தொலைக்கும் சமூகவலைதளம்

      உறக்கம் தொலைக்கும்            சமூகவலைதளம்          **********************                        08-09-2020             கட்டுரை எண் 137 5           !!J . Yaseen iMthadhi !!                     *************                              ﷽                      !!!!!!!!!!!!!!!!! எந்த ஈடுபாடு ஒரு மனிதனின்  தூக்க நேரத்தை நிம்மதியை அன்றாட இயல்பு வாழ்கை முறையை  கெடுக்கிறதோ அது தான் அவன் தனது ஆரோக்ய வாழ்விற்கு தானாகவே ஏற்படுத்தி கொள்ளும் விபரீதம் சமூகவலைதளம் மூலம் ஆயிரமாயிரம்  அறிவுப்பூர்வமான கருத்துக்களை போட்டாலும் அந்த கருத்துக்கள் ஒரு மனிதனை தனியாக சந்தித்து செய்யும் போதனைகளின் மூலம் ஏற்படும் சமூக மாற்றத்தில் பத்து சதவிகித பலனை கூட  ஏற்படுத்தாது காரணம் சமூகவலைதளம் என்பது டைம்பாஸ் என்ற அடித்தளத்தில் தான்  செயல்படுகிறது சமூகவலைதளத்தில் நள்ளிரவு  12 ,1,2,3, மணியில் கூட அறிக்கைகளை போட்டு  உலவும் நபர்களை சாதாரணமாக  காண முடிகிறது அதிகாலை சுறுசுறுப்போடு கண் விழித்து பஜ்ரு தொழுகையை கடை பிடிக்க வேண்டிய நேரமும் கூட இவர்களில் பலர்களுக்கு  நடுஇரவாக  இருப்பது இவர்களின் இயல்பு வாழ்கைய