Share நோயாளிகள்

             Share நோயாளிகள் 

                    ************

 26:09:2020 .J.YASEEN IMDHATHI

                      **********

கண்ணால் காணும் செய்திகளை சிந்தனையின்றி  பரப்பும் கருத்து மனநோய் முஸ்லிம்களிடம் உள்ளது என்பதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன 

அதில் ஒன்று தான் 25:09:2020 வெள்ளி கிழமை பள்ளிவாசல்களில் கொரோனாவை முன்னிட்டு கடை பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்  பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்கு அரசாங்க அதிகாரிகள் வருகிறார்கள்  எனவே கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற வாட்சப் புரளி

ஒரு கருத்தை பரப்பும் நபர் அதை நான் தான் எழுதினேன் இந்த ஆதாரத்தை வைத்து வெளியிடுகிறேன் என்ற சுய விபரத்தை பதிக்க வேண்டும் 

அது போன்ற எந்த விபரமும் இல்லாமல் குழுமங்களில் பரப்பப்பட்ட மொட்டை பதிவே அது 

சமூகத்தின் அச்சத்தை காரணமாக வைத்து எதை வெளியிட்டாலும் அதை பரப்புவதற்கு என்று முஸ்லிம் சமூகத்தில் பல மூடர்கள் இருக்கிறார்கள் என்ற ஆழமான நம்பிக்கை தான் இது  போன்ற கற்பனை  பதிவுகளை தயாரிப்போரின் அபார நம்பிக்கை

அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக பல முஸ்லிம்கள் அந்த மொட்டை பதிவை வாட்சப் குழுமங்களில் பரப்பியும் விவாதித்தும்  தங்களின் அறிவீனத்தை அவர்களாகவே நிரூபித்தும் விட்டனர் 

பரப்பப்பட்ட கருத்து பொய்யாக்கப்பட்ட பின் அதை பரப்பியோர் தலைகுனிவார்கள் என்பதினால் தான் இதை இப்போது சுட்டிக்காட்டுகிறோம்  ஆனால் அந்த தகவல் பொய்யானது என்பதை அதை கண்டவுடனே தீர்மானித்து விட்டோம் 

இது போன்ற அறிவீனங்களை பரப்பும் மடமையை இனியாவது சமூகவலைதளத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் கைகழுவ வேண்டும் 

தற்போது எஸ் பி பாலசுப்ரமணியம் மரணத்தை ஒட்டியும் இது போல் ஒரு மொட்டை தகவல் முஸ்லிம் பெயரில் சமூகவலைதளத்தில் பரப்பப்படுகிறது 

அடிப்படை இஸ்லாமிய ஞானம் இருக்கும் எவருமே அது போல் ஒரு கருத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற பொதுஞானம் கூட இல்லாது அதை ஒரு செய்தியாக அறிக்கை போட்டு சுற்றும் மே(?) தாவிகள் இனியாவது திருந்தட்டும் 

             நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்