அரபி ஹிந்தி தொடர்பு
ஹிந்தி மொழி வேடதாரிகள்
============
08-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
===============
எம்மொழியும் மனிதன் தனது கருத்தை வெளிப்படுத்த உதவும் கருவி என்பதை தாண்டி வேறு எந்த சிறப்பும் மொழிகளுக்கு இல்லை
ஒரு மொழியை பேசுவதால் ஒருவன் சிறந்தவன் என்றால் எம்மொழியும் பேச இயலாத ஊமையனே மேலானவன்
காரணம் மொழியின்றி உடல் அசைவுகளால் தனது கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் ஊமையனுக்கே உண்டு
காவிச்சிந்தனை கொண்டவர்கள் ஹிந்தி மொழியை வேத மொழியாக கருதுவதும் அதை மக்களுக்கு திணிப்பதும் தான் தற்போதைய விவகாரம்
உண்மையில் காவிசிந்தனை உடையவர்கள் ஹிந்தி மொழி மீது பற்றுடையவர்களாக இருந்தால் அவர்கள் அரபு மொழிக்கு தான் அதிகம் முக்கியதுவம் வழங்க வேண்டும்
காரணம் அரபு மொழியின் கலப்படத்தில் இருந்து பிறந்ததே ஹிந்தி மொழி என்ற கசப்பான உண்மையை காவிச்சிந்தனை உடையவர்கள் புரிந்து கொள்ளவில்லை
அரபு மொழியை சற்று எளிமையாக்கியே உருது மொழி முகலாயர்களால் உருவாக்கப்பட்டது
எனவே தான் உருது மொழி பேசுபவர்களுக்கு அரபு மொழி எளிமையாக புரிகிறது
உருது மொழியை சமஸ்கிருத மொழியில் கலந்து உருவாக்கப்பட்ட மொழி தான் ஹிந்தி மொழி
எனவே தான் பேச்சு வழக்கில் ஹிந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு தெரிவது இல்லை
தேவநாகரீ எழுத்துரு கொண்டது ஹிந்தி மொழி
அரேபியா எழுத்துரு கொண்டது உருது மொழி
மற்றபடி ஹிந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது காவிகளின் தவறான மடமைத்தனமான பிரச்சாரம்
அரபு மொழியில் வேதத்தை பெற்ற முஸ்லிம்கள் அரபு மொழி தான் சிறந்தது என்று எப்போதும் கூறுவது இல்லை
ஆனால் இந்திய முஸ்லிம்களை அரபு நாட்டு குடிமக்கள் போல் துஷ்பிரச்சாரம் செய்யும் காவிச்சிந்தனை உடையோர் அரபு மொழியை வெறுப்பதும் அரபு மொழிக்கும் உருது மொழிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லாதது போல் வெளிக்காட்டி கொள்வதும்
கபட நாடகமாகும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment