நீதியும் பாபர் மஸ்ஜிதும்
அநீதியின் உச்சகட்டம்
பாபர் மஸ்ஜித் குற்றவாளி
*******
30-09-2020
J . Yaseen iMthadhi
Bismillahir Rahmanir Raheem
கட்டுரை 1376
====================
நீதிமன்றத்தின் மீது நாட்டு மக்களுக்கு இருக்கும் மரியாதையில் கடுகளவு மரியாதை கூட இந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆளுபவர்களுக்கும் சில நீதிபதிகளுக்கு அறவே இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்
கொலை செய்தவனே நான் தான் கொலை செய்தேன் என்று வீடியோ ஆதாரங்களோடு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும் நீ கொலை செய்தது நிரூபிக்கபடவில்லை என்று குற்றவாளியே வியக்கும் அளவு கொலையாளிக்கு பரிந்து பேசி கொலையாளி நீதிவான் என்று தீர்ப்பு வழங்குவதற்கும்
பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கிய சங்கிகளுக்கு சாதகமாக 30:09:2020 அன்று லக்னோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் கடுகளவு வேறுபாடும் இல்லை
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முன் கூட்டியே தீட்டப்பட்ட சதி அல்ல என்று நீதிபதிகள் தனது அறிக்கையில் கூறியுள்ளதும் கரசேவையை தடுக்க கரசேவைக்கு அழைத்து சென்றவர்களே அதை தடுக்க முயற்சி செய்தார்கள் என்று குற்றவாளிகளின் வன்மத்தை நியாயப்படுத்தி நீதி வழங்கியது நீதிபதிகளின் மீது இருந்த ஓரளவு மரியாதையை கூட நாட்டு மக்களிடம் இருந்து முற்றிலும் தவிடு பொடியாக்கி விட்டது
அரசியல் சாசன சட்டத்தை மதித்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இழைக்கப்பட்ட அநீதத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று பல வருடம் பொறுமை காத்த குடிமக்களை விட சட்டத்தை மிதித்து மனிதநேயத்தை புதைக்கும் காட்டுமிராண்டிகளுக்கு தான் நீதிபதிகள் தலை சாய்ந்து பேசுவார்கள் என்ற அழிக்க முடியாத அவப்பெயரை இன்றைய தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் நிலைநாட்டி விட்டனர்
நீதி வழங்கும் பதவியை பெற்று விட்டால் தன்னை கடவுள் போன்று கருதும் ஆணவமும் பதவிக்கும் பணத்திற்கும் அடிமை படும் ஈனத்தன்மையும் நீதிபதிகளிடமும் புற்றீசலாய் வளர்ந்து விட்டது
இறைவனின் கடுமையான பிடியும் இழிவான மரணமும் அயோக்கியர்களை ஒரு போதும் விட்டு வைக்காது
என்ற ஆழமான நம்பிக்கை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய மக்களிடம் இருப்பதால் தான் இன்றும் மவுனம் காக்கின்றனர்
விரைவில் இறைவனின் தீர்ப்பை எதிர்பார்க்கும் ஒருவனாய் நானும்
وَيُحِقُّ اللّٰهُ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான்
(அல்குர்ஆன் : 10:82)
நட்புடன் இந்திய குடிமகன்
J. இம்தாதி
Comments
Post a Comment