உறக்கம் தொலைக்கும் சமூகவலைதளம்
உறக்கம் தொலைக்கும்
சமூகவலைதளம்
**********************
08-09-2020
கட்டுரை எண் 1375
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
எந்த ஈடுபாடு ஒரு மனிதனின் தூக்க நேரத்தை நிம்மதியை அன்றாட இயல்பு வாழ்கை முறையை கெடுக்கிறதோ அது தான் அவன் தனது ஆரோக்ய வாழ்விற்கு தானாகவே ஏற்படுத்தி கொள்ளும் விபரீதம்
சமூகவலைதளம் மூலம் ஆயிரமாயிரம் அறிவுப்பூர்வமான கருத்துக்களை போட்டாலும் அந்த கருத்துக்கள்
ஒரு மனிதனை தனியாக சந்தித்து செய்யும் போதனைகளின் மூலம் ஏற்படும் சமூக மாற்றத்தில் பத்து சதவிகித பலனை கூட ஏற்படுத்தாது
காரணம் சமூகவலைதளம் என்பது டைம்பாஸ் என்ற அடித்தளத்தில் தான் செயல்படுகிறது
சமூகவலைதளத்தில் நள்ளிரவு 12 ,1,2,3, மணியில் கூட அறிக்கைகளை போட்டு உலவும் நபர்களை சாதாரணமாக காண முடிகிறது
அதிகாலை சுறுசுறுப்போடு கண் விழித்து பஜ்ரு தொழுகையை கடை பிடிக்க வேண்டிய நேரமும் கூட இவர்களில் பலர்களுக்கு நடுஇரவாக இருப்பது இவர்களின் இயல்பு வாழ்கையை இறை சிந்தனையை எந்தளவு சமூகவலைதளம் சீரழித்துள்ளது என்பதற்கு தான் சான்று
இஷாவிற்கு பின் உறங்குவதை வலியுருத்த வேண்டிய அறிஞர்கள் கூட இஸ்லாமிய தஃவா எனும் பெயரில் இரவு நேரங்களில் தான் சமூவலைதளத்தில் அதிகம் மக்களின் நேரத்தை பாழாக்குவதுடன் தனது உறக்க நேரத்தையும் செலவு செய்கின்றனர்
மனிதன் அல்லாத எந்த ஒரு பிராணியும் இருள் சூலும் நேரத்திற்கு பின் அத்தியாவசிய தேவையின்றி ஊரை சுற்றுவதில்லை ஓசைகளை எழுப்புவதும் இல்லை
மனிதன் மட்டுமே இந்த பாக்கியத்தை உணராதவனாக இருக்கின்றான்
கழிவறைக்கு செல்ல நேரம் ஒதுக்கும் நாம்
உணவருந்த செல்ல நேரம் ஒதுக்கும் நாம்
கடமையான தொழுகையை நிறைவேற்ற கூட நேரம் ஒதுக்கும் நாம்
சமூகவலைதளத்தை மூடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தை கடமை போல் தீர்மானிக்க வேண்டும்
இத்தனை மணிக்கு மேல் இந்த நண்பர் சமூகவலைதளத்தில் இருக்க மாட்டார் என்ற எண்ணத்தை பிறர் அறியும் அளவு மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
***********
547. ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்
இஷாவுக்கு முன் உறங்குவதையும்
இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர்
நூல் : ஸஹீஹ் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment